தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

24 Nov 2025, 3:26 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தவெக ஆனந்த், ஆதவ் அர்ஜூனா  சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம்  தொடர்பான வழக்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரச்சாரப் பிரிவு பொதுச் செய லாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் சிபிஐ அலுவல கத்தில் திங்களன்று (நவ.24) விசாரணைக்கு ஆஜராகினர். கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்.27 ஆம் தேதி விஜய் பங்கேற்ற தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்  பலியாகினர். 110 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக  உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் விசா ரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தவெக கட்சியின் மாநில நிர்வாகிகளான ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் மற்றும் கரூர் மாவட்டச் செயலர் மதியழகன் உள்ளிட்டோரிடம் சிபிஐ காவல் துறையினர் திங்களன்று விசாரணை நடத்தினர். சிபிஐ அதி காரிகள் தங்கி இருக்கும் பொதுப்பணித் துறையின் சுற்றுலா மாளிகைக்கு விசாரணைக்காக தவெக நிர்வாகிகள் நேரில் ஆஜராகினர்.  ஏற்கனவே சென்னை பனையூர் அலுவலகத்தில் சிபிஐ  காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், தற்போது நிர்வாகிகளை கரூர் வரவழைத்து நேரில் விசா ரணை மேற்கொண்டனர்.

ஆர்.எஸ்.எஸ்., பாஜக காலூன்ற முடியாது!

சென்னை: பீகார் தேர்தல் முடிவுகளால் தமிழ்நாட்டில்  காங்கிரஸ் கட்சிக்கு எந்த விதமான பின்னடைவும் இருக்காது. தமிழ்நாட்டில் ஒருபோதும் பாஜக ஆளுங்கட்சியாக இருந்த தில்லை என்றும், தமிழ்நாட்டில் ஒருபோதும் ஆர்.எஸ்.எஸ்.,  பாஜக காலூன்ற முடியாது, அதற்கு வாய்ப்பு கிடையாது என்றும் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.

மீனவர்களுக்கு டிச.8 வரை காவல்

நாகை: நாகை மீனவர்கள் 14 பேருக்கு டிச.8 வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த  மீனவர்கள் 14 பேரை நவ.9 அன்று இலங்கை கடற்படை கைது  செய்தது.

பாஜகவின் ‘சி’ டீம் விஜய் அமைச்சர் ரகுபதி சாடல் புதுக்கோட்டை:

புதுக் கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 7 புதிய பேருந்து களின் சேவையை தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச் சர் ரகுபதி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகி யோர் தொடங்கி வைத்த னர்.  பின்னர் அமைச்சர்  ரகுபதி செய்தியாளர்களி டம் கூறுகையில், “தவெக ஆச்சர்யகுறி யாக இருந்தாலும் சரி,  தற்குறியாக இருந்தா லும் சரி, எந்த குறியாக  இருந்தாலும் எங்களுக்கு  கவலை இல்லை. எங்க ளது குறி தேர்தல். யாரை  கண்டும் அஞ்ச வேண்டி யது கிடையாது. எங்க ளுக்கு போட்டியும் கிடை யாது. களத்தில் இருக்கக் கூடிய அனை வரையும் சமமாகத்தான் பார்க்கிறோம். அவர்கள் அனைவருமே அரசியல் எதிரிகள்தான். தனிப் பட்ட எந்த விரோதமும் அவர்களிடம் எங்க ளுக்கு கிடையாது. ஆரம் பத்தில் இருந்து பாஜக வுடைய ‘சி’ டீம் விஜய்  என்று சொல்லியு உள்ளேன். ஒரு காலத் தில் அவர்களது ஸ்லீப்பர்  செல்களாக இருந்த வர்கள், இன்று அரசியல் களத்திற்கு வந்துள்ள னர்” என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.