கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தற்காலிக அரசு பணி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
10 Jul 2026, 11:42 am
<p>கரூர் கூட்ட நெரிசலில் இறந்தோர் குடும்பத்திற்கு தற்காலிக அரசு பணி வழங்கலாம் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.</p><p>கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்குவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை இன்று விசாரித்தது.</p><p>விசாரணையின் போது, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கக்கூடாது என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த நீதிமன்றம், வழக்கில் இறுதி முடிவு எடுக்கப்படும் வரை அவர்களுக்கு தற்காலிக அடிப்படையில் மட்டும் அரசு பணி வழங்கலாம் என்று உத்தரவிட்டது.</p><p>மேலும், இந்த வழக்கின் மேல் விசாரணையை ஜூலை 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்</p>
