தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கரூரில் ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்ட நிதி முடக்கம்: பாதியில் நிற்கும் கட்டுமானப் பணிகள்

3 Jun 2026, 9:40 pm
கரூரில் ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்ட நிதி முடக்கம்: பாதியில் நிற்கும் கட்டுமானப் பணிகள்

கரூரில் ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்ட நிதி முடக்கம்: பாதியில் நிற்கும் கட்டுமானப் பணிகள்

கரூர், ஜூன் 3- கரூர் மாவட்டத்தில் ‘கலை ஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு உரிய நிதி கிடைக்காததால் கட்டுமானப் பணிகள் பாதியில் நிறுத்தப் பட்டு, பொதுமக்கள் குடியிருக்க வீடின்றித் தவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இத்திட்ட த்திற்கான நிதியை உடனடி யாக வழங்கிடக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் களுடன் சென்று மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

நிதி கிடைக்காமல் ஏழை மக்கள் அவதி தமிழகம் முழுவதும் கலை ஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கூடுதல் வீடுகள் கட்டுவதற்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் கடந்த பிப்ரவரி 5 அன்று அரசாணை வெளி யிடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, கரூர் மாவட்டத்தில் 1,000 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இதனை நம்பி ஏழை, எளிய மற்றும் விவ சாயப் பொதுமக்கள் தங்களின் பழுதடைந்த பழைய வீடுகள் மற்றும் குடிசைகளை இடித்து அப்புறப்படுத்திவிட்டு, கடன் களை வாங்கிப் புதிய வீடு கட்டும் பணிகளைத் தொடங்கினர். இத்திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பயனாளிகளுக்கு மொத்தம் 3 லட்சத்து 50 ஆயி ரம் ரூபாய் நிதி வழங்கப்படு கிறது.

இதில் அடித்தளம் அமைத்தவுடன் முதல் தவணை யாக 85 ஆயிரம் ரூபாயும், லிண்டல் மட்டம் வரை முடித்தவுடன் 70 ஆயிரம் ரூபா யும், கூரை அமைத்த பின் 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயும், பணிகள் முற்றிலும் முடி வடைந்ததும் 85 ஆயிரம் ரூபா யும் பிரித்து வழங்கப்படும். மேலும், தனிநபர் கழிப்பறை கட்ட தனியாக 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

பாதியில் நின்ற பணிகள்: தெருவில் நிற்கும் அவலம் பயனாளிகள் பலர் தங்க ளின் பொருளாதார வசதிக் கேற்ப அல்லது கடன்களை வாங்கியோ அடித்தளம் முதல் மோல்டிங் வரை கட்டுமானப் பணிகளை முடித்துள்ளனர். ஆனால், இதுவரை இத்திட்டத் தின் கீழ் ஒரு ரூபாய் கூட பய னாளிகளுக்கு நிதி வழங்கப்பட வில்லை.

இதனால் திட்டம் முற்றிலும் முடக்கப்பட்டது போன்ற நிலை உருவாகியுள் ளது. மேற்கொண்டு பணி களைத் தொடர முடியாமல், ஏழை மக்கள் குடியிருக்க வீடும் இன்றித் தெருவில் நிற்கும் அவல நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர்.

குறிப்பாக, கரூர் மாவட்டம் கடவூர் வட்டத்திற்கு உட்பட்ட மாவத்தூர், பாலவிடுதி, இடையப்பட்டி, கடவூர், ரெட்டியப் பட்டி, புங்கம்பாடி உள்ளிட்ட கிராமப்புறங்களில் 165 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்நிலங்களுக்கு ஒரு பைசா கூட நிதி வராததால், இத்திட்டம் செயல்பாட்டில் உள்ளதா இல்லையா என்ற பெரும் குழப்பத்தில் பொதுமக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை பொருளாதார வசதியற்ற ஏழை மக்களின் அவல நிலை யைப் போக்கிட, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை உடனடியாகப் பய னாளிகளுக்கு வழங்கிட மாவட்ட ஆட்சியர் போர்க்கால அடிப்ப டையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த மனுவை அளித்தபோது சிபிஎம் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.ராமமூர்த்தி, எம்.தண்டபாணி மற்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஏராளமானோர் திரளாகக் கலந்துகொண்டனர். (நநி)

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.