தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கரூரில் தலித் இளைஞரை மரத்தில் கட்டிவைத்து கொலைவெறித் தாக்குதல் தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்!

14 Jun 2026, 10:41 pm
கரூரில் தலித் இளைஞரை மரத்தில் கட்டிவைத்து கொலைவெறித் தாக்குதல் தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்!
<p><strong>கரூரில் தலித் இளைஞரை மரத்தில் கட்டிவைத்து கொலைவெறித் தாக்குதல் தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்!</strong></p><p>கரூர், ஜூன் 14- கரூர் அருகே தலித் இளைஞரைச் சாதிய ஆதிக்க சக்திகள் மரத்தில் கட்டி வைத்துக் கொலைவெறித் தாக்குதல் நடத்திய கொடூரச் சம்பவத்திற்குத் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இத்தாக்குதலில் காயமடைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செல்வகுமாரை (37), முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி, மாநிலத் துணைத் தலைவர் ஜி.ராணி உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். வேடிச்சிபாளையத்தைச் சேர்ந்த செல்வகுமாரின் மகன் ஹரிஷ்வா (5-ஆம் வகுப்பு), கடந்த ஜூன் 5 அன்று நண்பர்களுடன் கடைவீதி பொதுவெளியில் உள்ள கொடிக்கம்பம் அருகே விளையாடியுள்ளான். அப்போது அங்கு வந்த சாதி ஆதிக்கவாதியான கோவிந்தன், சிறுவனைச் செருப்பால் அடித்துள்ளார். இதனைத் தட்டிக்கேட்ட செல்வகுமாரைப் பழிவாங்கத் திட்டமிட்ட சாதி ஆதிக்க கும்பல், அவர் திருச்சி மாவட்டம் சின்ன பள்ளிபாளையத்தில் இருந்தபோது கடத்தி வந்துள்ளது. பின்னர் வேடிச்சிபாளையம் கடைவீதி வேப்ப மரத்தில் அவரைத் தூணில் கட்டுவது போல் கட்டி வைத்து, இரும்புக் கம்பி மற்றும் கட்டைகளால் கொடூரமாகத் தாக்கியுள்ளது. தடுக்க வந்த அவரது மனைவி முத்துச்செல்வி, தாய் லட்சுமி ஆகியோரையும் அக்கும்பல் விட்டுவைக்காமல் தாக்கியுள்ளது. இத்தாக்குதலில் செல்வகுமாரின் இடது கால் எலும்பு முறிந்து, மண்டை உடைந்து பலத்த காயமடைந்துள்ளார். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தல் இக்கொடூரம் குறித்துப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி விடுத்துள்ள கண்டன அறிக்கையில், சிறுவர்கள் விளையாடியதைச் சாதிய வன்மத்துடன் அணுகி, அதனைக் கேட்கச் சென்ற தந்தையையும் ஊரே சேர்ந்து கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ள மனசாட்சியற்ற செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார். தாக்குதல் நடத்திய அனைவர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குத் தகுந்த பாதுகாப்பும் தீர்வுதவியும் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். மேலும், கரூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் சாதியத் தீண்டாமை வன்முறைகளை மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.