முந்தய பக்கம்

கரூரில் ரூ.5.77 லட்சம் பறிமுதல்: சிக்கிய முன்னாள் அமைச்சர் ஆதரவாளர்

8 Apr 2026, 5:58 pm
கரூரில் ரூ.5.77 லட்சம் பறிமுதல்: சிக்கிய முன்னாள் அமைச்சர் ஆதரவாளர்
<p>அதிமுக முன்னாள் அமைச்சரும் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.5 லட்சத்திற்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p><p>கரூரில், தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ராஜா என்பவர் ரூ.5 லட்சத்து 77 ஆயிரம் பணத்தை உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்றது கண்டறியப்பட்டது.</p><p>இதுகுறித்து பறக்கும் படையினர் நடத்திய விசாரணையில், அவர் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் ஆதரவாளர் என்றும், தேர்தல் செலவிற்காக பணம் எடுத்துச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>இதனையடுத்து, உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு, தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram