தீக்கதிர் முக்கிய செய்திகள்
3 Jun 2026, 9:32 pm

கலைஞர் 103-ஆவது பிறந்த நாள்: நினைவிடத்தில் தலைவர்கள் மலரஞ்சலி!

சென்னை: முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணா நிதியின் 103-ஆவது பிறந்த நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா, கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். மேலும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகம், முரசொலி அலுவலகம் மற்றும் அண்ணா அறிவாலயத் தில் உள்ள கருணாநிதியின் திருவுருவச் சிலைகளுக்கு மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “கலைஞரின் ஆற்றலோடு மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்; உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் விஜய் வாழ்த்துச் செய்தி

சென்னை: முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணா நிதியின் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ் மொழி, இலக்கியம், திரைத்துறை, அரசியல், ஆட்சி நிர்வாகம் மற்றும் மாநில உரிமைகள் போன்றவற்றில் கலைஞரின் பங்களிப்பை நினைவு கூர்ந்து எனது மரியாதை கலந்த வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

முதல்வரின் தனிப்பிரிவு மனுப் பெட்டி இடமாற்றம்

சென்னை: முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையி லான தவெக அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வரின் தனிப்பிரிவுக்குப் பொது மக்கள் அளிக்கும் புகார்கள் குவிந்து வருகின்றன. இதனால் ஏற்படும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த, தனிப்பிரிவு மனுப் பெட்டியைத் தலைமைச் செயலகத்தின் நுழைவு வாயி லுக்கே அதிகாரிகள் இடமாற்றம் செய்துள்ளனர். பாதுகாப்புப் பரிசோதனை நடக்கும் இடத்திலேயே மனுக் களைப் பெட்டியில் போட்டுவிட்டுச் செல்லுமாறு காவல்துறை யினர் அறிவுறுத்துகின்றனர். நேரில் மனு அளித்தால் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என நம்பி வந்த பொது மக்களுக்கு இந்நடைமுறை ஏமாற்றத்தை அளித்துள்ளது. பொதுமக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அரசு விதித்துள்ள இந்தக் கட்டுப்பாடுகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரி வித்துள்ளன.

காங்கிரசுக்கு மாநிலங்களவை பதவி

சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள மாநிலங் களவை இடத்தை காங்கிரஸுக்கு ஒதுக்குவதாக முதலமைச் சர் விஜய் அறிவித்துள்ளார். ஜூன் 18 அன்று நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் தமிழகத்திலிருந்து தேர்ந் தெடுக்கப்பட உள்ள இந்த உறுப்பினர் பதவி காங்கிரஸுக்கு ஒதுக்கீடு செய்யப்படுவதாக முதல்வர் விஜய் உறுதிப்படுத்தி யுள்ளார்.

கட்டுமானப் பொருட்களுக்கு விலை நிர்ணயம்

சென்னை: தமிழ்நாடு அர சின் துறைகளில் மேற்கொள் ளப்படும் கட்டுமானப் பணி களுக்கான பொருட்களின் விலைகள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. சிமெண்ட், கம்பி, பணியாளர் ஊதியம், பணி களுக்கான கட்டணம் ஆகிய வற்றை நிர்ணயம் செய்து 2026–27ஆம் ஆண்டுக் கான விலை அட்டவணை அறி விக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கட்டுமானப் பொருட் களுக்கான கட்டணங்கள் இவ்வாறு நிர்ணயம் செய்யப் படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.