திருப்பரங்குன்றத்தில் வழக்கம்போல கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது! கடைசி நிமிடம் வரை கலவர முயற்சியில் ஈடுபட்ட சங்-பரிவாரங்கள்
3 Dec 2025, 2:59 pm
<p><strong>திருப்பரங்குன்றத்தில் வழக்கம்போல கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது! கடைசி நிமிடம் வரை கலவர முயற்சியில் ஈடுபட்ட சங்-பரிவாரங்கள்</strong></p>
<p>மதுரை, டிச. 3 - திருக்கார்த்திகையை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலையில், வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சி பிள்ளையார் கோவில் தீப மண்ட பத்தில், பக்தர்களின் அரோகரா கோஷத் திற்கு இடையே கார்த்திகைத் தீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக, தீபம் ஏற்றுவதற்காக திருக்கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பாலாஜி சார்பில் 4 அடி உயரம், 2 அடி அகலத்தில் 70 கிலோ எடை யுடன் புதிய தாமிரக் கொப்பரை வழங்கப்பட்டது. அதில், 450 லிட்டர் நெய் மற்றும் 300 மீட்டர் காடா துணியை பயன்படுத்தி தீபக் கொப்பரை உருவாக்கப்பட்டது. இந்த தீபக் கொப்பரை மற்றும் பூஜைப் பொருட்களும் மலைக்கு உச்சிப்பிள்ளையார் கோவில் தீப மண்டபத்திற்கு எடுத்துச் செல்லப் பட்டது. 5 மணிக்கு யாகம் வளர்க்கப் பட்டு, விநாயகர் பூஜை, அக்னி லிங்க பூஜை, வர்ண பூஜை ஆகியவை நடத்தப்பட்டன. தீபாராதனைக்குப் பின் தீப கொப்பரையில் புனித நீர் தெளிக்கப்பட்டது. அதேநேரத்தில் அடி வாரத்தில் முருகன் கோவிலுக்குள் உள்ள மூலவர்களின் சன்னதிகளில் பால தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் அங்கி ருந்து கோவில் மணி அடிக்கப்பட்ட தும், 6.15 மணிக்கு மலையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. அதனைக் கண்ட பக்தர்கள் அரோகரா என்று முழக்கமிட்டும், கையெடுத்து கும்பிட்டும் மகா தீபத்தை வணங்கினர். முன்னதாக, மலைக்கு மேலே தர்ஹா அருகிலிருக்கும் எல்லைக்கல் மீது தான் கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டும் என்று பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட சங்-பரிவாரக் கும்பல், கடைசி நிமிடம் வரை கலவர முயற்சிகளில் ஈடுபட்டனர். பாஜக நிர்வாகிகள் இராம. சீனி வாசன், எஸ்.ஜி. சூர்யா, இந்து தமிழர் கட்சியின் ராம. ரவிக்குமார் உள்ளிட் டோர் காலையிலேயே திருப்பரங் குன்றத்திற்கு வந்தனர். அவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை யும், அதிலும் சு. வெங்கடேசன் எம்.பி.யை குறிவைத்து விமர்சித்தனர். அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு மற்றும் காங்கிரஸ், விசிக கட்சிகளையும் சாடினர். அவர்களோடு, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிர மணியம் இணைந்து கொண்டார். அவரது தலைமையில், தீபாராதனை, பஜனை என்ற பெயரில், 16 கால் மண்டபம் அருகில் கலவர முஸ்தீபில் ஈடுபட்ட இந்து முன்னணியினர், மாலை 6 மணியளவில் போலீசார் அமைத்திருந்த நான்கு கட்ட தடுப்புக்களை உடைத்துக் கொண்டு, மலைகளில் ஏறினர். அப்போது நடந்த தள்ளு-முள்ளு களேபரத்தில் போலீ சார் ஒருவரின் மண்டை உடைந்தது. இதனால் கார்த்திகை தீபம் ஏற்றிய பிறகும், திருப்பரங்குன்றத்தில் பதற்றம் நிலவியது. இதனால் திருப்பரங்குன்றத்தில் மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்தார். நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தலையீடு இதனிடையே, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கு வழக்குத் தொடர்ந்த இந்து முன்னணி கோட்டச் செயலாளர் அரச பாண்டி, இந்து வழக்கறிஞர் முன்னணி மாநில துணைத்தலைவர் பரமசிவம், இந்து தமிழர் கட்சி ராம. ரவிகுமார் ஆகியோர் மத்திய அதிரடிப்படை (சிஆர்பிஎப்)போலீஸ் பாதுகாப்போடு, மலை உச்சியில் உள்ள எல்லைக் கல்லில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். மேல் முறையீடு ஏற்பு இந்தப் பின்னணியில், தர்கா அருகில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிராக கோவில் நிர்வா கம் சார்பில் அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார். இந்த வழக்கு வியாழனன்று விசார ணைக்கு வருகிறது.</p>
