கார்த்தி வித்யாலயா பள்ளியில் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போர்டு போட்டி
27 Jun 2026, 11:14 pm
<p><strong>கார்த்தி வித்யாலயா பள்ளியில் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போர்டு போட்டி</strong></p><p>கும்பகோணம், ஜுன் 27- கும்பகோணம், கார்த்தி வித்யாலயா பள்ளியில், மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போர்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், கும்பகோணம் பகுதியைச் சுற்றி பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். வயது அடிப்படையில் ஆறு, எட்டு, பத்து, பன்னிரெண்டு, பதினான்கு வயதுக்குட்பட்டவர்களுக்கு ஆறு பிரிவுகளாக நடைபெற்றது. மாணவ, மாணவியருக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுத்தும் ஸ்கேட்டிங் போட்டியினை பள்ளி தாளாளர் கார்த்திகேயன் துவங்கி வைத்து, வாழ்த்தினை தெரிவித்தார். சிறப்பாக விளையாடி, முதல் மூன்று இடம் பிடித்த மாணவ, மாணவியருக்கு பதக்கங்களை கார்த்தி வித்யாலயா பன்னாட்டு பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் வழங்கினார். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.</p>
