கர்நாடகாவில் மீண்டும் ‘சொகுசுவிடுதி அரசியல்’
17 Jun 2026, 8:30 pm

கர்நாடகாவில் மீண்டும் ‘சொகுசுவிடுதி அரசியல்’

கர்நாடகா மாநிலத்தில் மீண்டும் ‘சொகுசு விடுதி அரசியல்’ தலை தூக்கியுள்ளது. ஜூன் 18 அன்று அம்மாநிலத்தின் சட்ட மேலவைத் தேர்தலுக்கு முன்னதாக, பாஜக ‘குதிரை பேரத்தில்’ ஈடுபடக் கூடும் என்ற அச்சத்தில், காங்கிரஸ் கட்சி தனது எம்எல்ஏக்களை வொண்டர்லா சொகுசு விடுதிகளில் தங்க வைத்துள் ளது.

இந்த பணிகளை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தனிப்பட்ட முறை யில் ஒருங்கிணைத்துள்ளதாகக் கூறப் படுகிறது. சட்ட மேலவையில் ஏழு இடங்க ளுக்காக எட்டு வேட்பாளர்கள் போட்டி யிடுகின்றனர்.

இதனால் ஒவ்வொரு வாக்கும் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. தங்கள் கட்சி எம்எல் ஏக்கள் கட்சி மாறி வாக்களிப்பதை தடுப்ப தற்காக காங்கிரஸ் கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது என கூறப்படுகிறது. ஜனதா தளம் (மதச்சார்பற்ற) மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து இத்தேர்தலை எதிர்கொள் கின்றன.

மதச்சார்பற்ற ஜனதா தளம் (JDS) தனது 18 சட்டமன்ற உறுப்பினர்க ளை வடக்கு பெங்களூரில் உள்ள ஒரு சொகுசு விடுதிக்கு மாற்றத் தயாராகி வருவதாக சில பத்திரிகைகள் குறிப் பிட்டுள்ளன. காங்கிரசுக்கு 134 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். ஆனால் சுமார் 120 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அந்த சொகுசு வீடுதிக்கு கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கட்சி மாறி வாக்களிப்பது, வாக்கெ டுப்பில் பங்கேற்காமல் இருப்பது, எம்.எல்.ஏ-க்கள் தங்கள் வாக்குகளைச் செல்லாததாக்குவதற்காக வேண்டு மென்றே தவறாகக் குறியிடுவது என மூன்று பிரச்சனைகளை காங்கிரஸ் எதிர்கொண்டு வருவதாகக் கூறப் பட்டுள்ளது.