கர்நாடகத்தில் முஸ்லிம் வாக்காளர்களைக் குறி வைத்து படிவம்-7 விநியோகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு
2 Oct 2026, 9:54 pm

கர்நாடகத்தில் முஸ்லிம் வாக்காளர்களைக் குறி வைத்து படிவம்-7 விநியோகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு

பெங்களூருகாங்கிரஸ் ஆளும் கர்நாடக மாநிலத்தின் பீதர் மாவட்டத்தில் உள்ளது என்கூர்கிராமம். இந்த கிராமத்தில் சிறப்புத் தீவிரத் திருத்த (எஸ்.ஐ.ஆர்) நடவடிக்கையின்போது, வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்களை நீக்கக் கோரி ‘படிவம்-7’ விண்ணப்பங்கள் பெருமளவில் தாக்கல்செய்யப்பட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மேலும், சிபிஎம் தலைமையிலான குழு ஒன்று என்கூருக்குசென்று ஆய்வு மேற்கொண்டுள்ளது.சிபிஎம் கர்நாடக மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே. நீலா, பீதர் மாவட்டக் குழு உறுப்பினர்கள் பிரபு சந்தோஷ்கர், கௌஸுதீன் மற்றும் சசிகாந்த் டங்கே ஆகியோர் அடங்கிய குழுவினர் வியாழக்கிழமையன்று என்கூருக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும், பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தபொதுமக்களைச் சந்தித்து விவரங்களைச் சேகரித்ததுடன், இரண்டு வாக்குச்சாவடி நிலை அலுவலரகளையும் (BLOs), வாக்குச்சாவடி நிலை முகவர்களையும் (BLAs) சந்தித்து நிலைமையைக் கேட்டறிந்தனர்.

இந்த ஆய்வுக்குப் பின் சிபிஎம்குழுவினர் சார்பில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே. நீலா கூறு கையில், “என்கூர் கிராமத்தின் 2 வாக்குச்சாவடிகளில் 68 படிவம்-7 விண்ணப்பங்கள் செப்டம்பர் 22 அன்று பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளன. மேலும்,198 விண்ணப்பங்கள் புகார்தாரரிடமே உள்ளன; அவை இன்னும் பதிவேற்றம் செய்யப்படவில்லை. என்கூர் கிராமத்தில்வாக்குரிமையைப் பறிக்கும் இந்த படிவம்-7 விண்ணப் பங்கள் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த வாக்காளர்களைஇலக்கா கக் கொண்டவையாகும். அத்த கைய படிவங்களை நிரப்பிச் சமர்ப்பிக்குமாறு தங்களுக்கு அழுத்தம்கொடுக்கப்பட்டதாக கிராம மக்கள் எங்களிடம் தெரிவித்தனர்.என்கூரில் சுமார் 725 முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானோரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கக் கோரி ‘படிவம்-7’ விண்ண ப்பங்கள்பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய நட வடிக்கை தகுதியான வாக்காளர்கள்வாக்களிக்கும் உரிமையை இழக்கச் செய்யும். என்கூர் கிராமத்தில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் எந்தவிதப் பாகு படியும் இன்றி ஒற்றுமையாக வாழ்ந்து வந்த வரலாறுஉள்ளது. கிராமத்தில் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும் மொஹரம் விழா வில், பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தமக்கள் கலாச்சார மற்றும் மத வழிபாடுகளில் பங்கேற்கின்ற னர். ஆனால், தற்போதைய எஸ்.ஐ.ஆர் பிரச்சினையால் கிராமத்தில் மதநல்லிணக்கத்தில் பிளவு ஏற்படும் சூழல் உருவாகி யுள்ளது.

மேலும், வாக்காளர் பட்டிய லிலிருந்து வாக்காளர்களை நீக்கும் இத்தகைய முயற்சியை என்கூர் கிராம மக்கள் எதிர்த்துள்ளதுடன், பல தலைமுறைகளாக கிராமத்தில் ஒன்றாக வாழ்ந்து வரும் மக்களின் வாக்குரிமை யை இந்த நடவடிக்கை பாதிக்கலாம் என்ற கவலையையும் எழுப்பியுள்ளனர்” என அவர் தெரிவித்தார்.