முந்தய பக்கம்

கர்நாடகா: அரசு பள்ளி இரும்பு கதவு விழுந்து 4 மாணவிகள் படுகாயம்

6 Jul 2026, 7:29 pm
கர்நாடகா: அரசு பள்ளி இரும்பு கதவு விழுந்து 4 மாணவிகள் படுகாயம்
<p>கர்நாடக மாநிலம் பாகல்கோட் அருகே அரசு பள்ளியின் இரும்பு கதவு விழுந்து 4 மாணவிகள் படுகாயம் அடைந்துள்ளனர்.</p><p>கர்நாடக மாநிலம், பாகல்கோட் மாவட்டம், பலகுண்டி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை தொடக்கப் பள்ளியின் இரும்பு கதவு இன்று திறக்கும்போது சரிந்து விழுந்து 4 மாணவிகள் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் 3-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பலத்த காயங்களுடன் முதலில் இலகல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக பாகல்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற மாணவர்கள் இலகல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p><br></p>
Share
FacebookXWhatsAppTelegram