கர்நாடக அரசின் புல்டோசர் அடாவடி 400 குடும்பங்களின் வீடுகள் இடிப்பு
26 Dec 2025, 3:44 pm
<p><strong>கர்நாடக அரசின் புல்டோசர் அடாவடி 400 குடும்பங்களின் வீடுகள் இடிப்பு</strong></p>
<p>பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் காங் கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக சித்த ராமையாவும், துணை முதலமைச்ச ராக டி.கே.சிவக்குமாரும் உள்ளனர். இந்நிலையில், யலஹங்கா வின் (பெங்களூரு வடக்கு) கோகிலு பகுதியில் உள்ள வசீம் லே அவுட் மற்றும் பக்கீர் காலனியில் உள்ள வீடுகள் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் டிசம்பர் 20ஆம் தேதி அதிகாலை சுமார் 4:15 மணிக்கு, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி புல்டோசர்கள் மூலம் இடிக்கப்பட்டன. அங்கு வசித்த 400 குடும்பங்கள் உடனடியாக வெளி யேறும்படி மிரட்டல் மட்டுமே விடுக்கப்பட்டது. ஆனால் அத்தியா வசிய ஆவணங்கள் மற்றும் உட மைகளைக்கூட எடுக்க அனுமதிக்கப் படவில்லை. மிகக் குறுகிய காலத்திற்குள் வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இதே பகுதியில் வசித்து வந்த பல குடும்பங்கள், தற்போது கடும் குளிர்கால இரவுகளில் தங்கு வதற்கு இடமின்றி திறந்தவெளி யில் தவித்து வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித மறுவாழ்வு, மாற்று இடவசதி குறித்து அரசுத் தரப்பில் எந்த வாக்குறுதியும் அளிக்கப்பட வில்லை. இத்தகைய சூழலில், வசீம் லே அவுட் மற்றும் பக்கீர் காலனி பகுதிக்குச் சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெங்களூரு வடக்கு மாவட்டக் குழு நேரில் ஆய்வு மேற்கொண்டது. கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் அனு மந்தராவ் ஹவில்தார் மற்றும் மூத்த தோழர்கள் பாதிக்கப்பட்ட மக்க ளை நேரில் சந்தித்து ஆறுதல் தெரி வித்தனர். மேலும் அவர்களுக்கு தங்களது முழு ஆதரவையும் உறு திப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து, இடதுசாரிக் கட்சிகள் மற்றும் முற்போக்கு அமைப்பு களின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் போராட்டத்தை ஒருங்கிணைப்பதற்காக “கோகிலு லேஅவுட் குடிசைப் பகுதி இடிப்பு எதிர்ப்பு குழு (Kogilu Layout Slum Anti-Demolition Committee)” அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் மழுப்பல் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதி ராஜகாலுவே ஏரி மற்றும் பெரிய வடிகால் பகுதி ஆகும். அங்குள்ள குடியிருப்புகள் சட்ட விரோதமாகக் கட்டப்பட்டவை. நீர்நிலைகளைப் பாதுகாப்பது தொடர்பான நீதிமன்ற உத்தரவு களை அமல்படுத்தவே இத்தகைய திடீர் நடவடிக்கைகள் எடுக்கப்படு வதாக கர்நாடக அரசு அதிகாரி கள் மழுப்பலாக விளக்கம் அளித்துள்ளனர்.</p>
