தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கர்நாடக வனத்துறையின் வெறிச்செயல் கால்நடைகளைத் தேடிச் சென்ற மூன்று தமிழர்கள் சுட்டுக்கொலை சிபிஎம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தலைவர்கள் கடும் கண்டனம்!

16 Aug 2026, 9:26 pm
கர்நாடக வனத்துறையின் வெறிச்செயல்  கால்நடைகளைத் தேடிச் சென்ற  மூன்று தமிழர்கள் சுட்டுக்கொலை சிபிஎம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தலைவர்கள் கடும் கண்டனம்!

கர்நாடக வனத்துறையின் வெறிச்செயல் கால்நடைகளைத் தேடிச் சென்ற மூன்று தமிழர்கள் சுட்டுக்கொலை

சிபிஎம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தலைவர்கள் கடும் கண்டனம்!

சென்னை, ஆக.16 -கர்நாடக மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டம் ஹானூர் தாலுகா தோமையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மூன்று தமிழர்கள், கர்நாடகவனத்துறையினரால் துப்பாக்கியால் சுடப்பட்டுப் படுகொலை செய்யப் பட்டுள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

நடந்தது என்ன?

தோமையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தாங்கள் வளர்க்கும் ஆடு, மாடுகளைக் காட்டுப் பகுதிக்கு மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்வது வழக்கம். அவ்வாறு மேய்ச்சலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பாமல் காட்டில் தங்கியிருந்த கால்நடைகளைத் தேடுவதற்காக ஆகஸ்ட் 15 அன்றுஅதிகாலை விவசாயிகள் சிலர் காட்டிற்குச் சென்றுள்ளனர்.அப்போது, மாடுகளைத் தேடிச்சென்றவர்களை எந்தவித முன்னெச்சரிக்கையும் இன்றியும், மனிதாபிமானம் அற்ற முறையிலும் கர்நாடகவனத்துறையினர் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இக்கொடூரத் தாக்குதலில் தோமையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணிசாமி (50), ஜான்ரோஸ் பீட்டர் (48), லாசர் குமார் (33) ஆகிய மூவரும்பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களுடன் சென்ற மற்றொரு விவசாயியான மகிமைதாஸ் படுகாயங்களுடன் உயிர்பிழைத்து, மைசூரு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சாட்சியாக உயிர் பிழைத்தமகிமைதாஸின் வாக்குமூலமே வனத்துறையின் கோர முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

மறைக்கப்படும் உண்மையும் வனத்துறையின் வன்மமும்

தாங்கள் செய்த படுகொலை யை மறைக்கும் நோக்கில், சுடப்பட்டவர்கள் மான் வேட்டையாட வந்ததாகக் கர்நாடக வனத்துறை அப்பட்டமாகபொய் கூறி வருகிறது.அதுமட்டுமின்றி, அருகில் 15 கிலோமீட்டர் தொலைவில் ஹானூர் அரசு மருத்துவமனை இருக்கையில், அங்கேபிரேதப் பரிசோதனை செய்யாமல், ஆதாரங்களை அழிக்கும் நோக்கத்தோடு அங்கிருந்து 110 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மைசூருமருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு உடல்களை ரகசியமாகக் கொண்டு சென்றுள்ளனர். இதற்கு உத்தரவிட்டதுயார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தலைவர்கள் நேரில் ஆறுதல்

படுகொலை செய்யப்பட்ட வர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற அகில இந்திய விவசாயிகள் சங்க இணை செயலாளர் டி. ரவீந்திரன், கர்நாடக விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் யஸ்வந்த், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஈரோடு மாவட்ட செயலாளர் ஏ.எம். முனுசாமி, பண்ணாரி சர்க்கரை ஆலை கரும்பு சங்க செயலாளர் பி. சடையப்பன் மற்றும் சாம்ராஜ் நகர் மாவட்ட விவசாயிகள் சங்க நிர்வாகிகள் நேரில்சென்றனர்.

சிபிஎம் கடும் கண்டனம்

இந்நிலையில், இச்சம்ப வத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தமது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். “காணாமல் போன கால்நடைகளைத் தேடிச் சென்ற விவசாயிகளை வனத்துறையினர் சுட்டுக் கொன்றது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தங்கள் தவறை மறைக்கும் நோக்கில் வேட்டையாடியதாகப் பொய்யான குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும்.கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதால் தமிழக அரசு உடனடியாக கர்நாடக அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கவேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் கண்டனம்

இதேபோல், கர்நாடக வனத்துறையினரால் மூன்று தமிழர்கள் அநியாயமாகச் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இக்கொலையில் குற்றம் இழைத்தவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் கர்நாடக வனத்துறை ஈடுபட்டு வருவதாகவும், இச்சம்பவத்தைக் கொலை வழக்காகப் பதிவு செய்ய வேண்டும் எனவும்,உயிரிழந்த மூவரின் குடும்பங்க ளுக்கு உரிய இழப்பீடு வழங்கப் பட வேண்டும் எனவும் அவர் வலி யுறுத்தியுள்ளார்.இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு வாழ்வாதாரத்திற்காக இடப்பெயர்ந்து கர்நாடக மண்ணில் வேரூன்றிய எளிய தமிழ் விவ சாயிகளின் குடும்பத்தைச் சேர்ந்த வர்களைதிட்டமிட்டுப் படுகொலை செய்துள்ள வனத்துறையின் இந்த வெறிச்செயலுக்கு நீதி கேட்டு கண்டனக் குரல்வலுத்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.