கர்நாடகாவில் கொல்லப்பட்ட தமிழர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை! – அமைச்சர் அறிவிப்பு
4 hours before

கர்நாடக வனத்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

கர்நாடக மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டம் தோமையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தாங்கள் வளர்க்கும் ஆடு, மாடுகளைக் காட்டுப் பகுதிக்கு மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்வது வழக்கம். அவ்வாறு மேய்ச்சலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பாமல் காட்டில் தங்கியிருந்த கால்நடைகளைத் தேடுவதற்காக ஆகஸ்ட் 15 அன்று அதிகாலை விவசாயிகள் சிலர் காட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது, மாடுகளைத் தேடிச்சென்றவர்களை எந்தவித முன்னெச்சரிக்கையும் இன்றியும், மனிதாபிமானம் அற்ற முறையிலும் கர்நாடக வனத்துறையினர் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இக்கொடூரத் தாக்குதலில் தோமையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணிசாமி (50), ஜான்ரோஸ் பீட்டர் (48), லாசர் குமார் (33) ஆகிய மூவரும்பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களுடன் சென்ற மற்றொரு விவசாயியான மகிமைதாஸ் படுகாயங்களுடன் உயிர்பிழைத்து, மைசூரு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சூழலில், சட்டப்பேரவையில், 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

இது தொடர்பாக முதலில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் முற்றிலும் மனித உரிமை மீறல் என்றும், இதனை ஃபேக் என்கவுண்டர் என்று குறிப்பிட்ட அவர் நீதி விசாரணை நடைபெற வேண்டும் என்றும் பேசினார்.

இதை தொடர்ந்து பேசிய சிபிஐ சட்டமன்ற உறுப்பினர் டி.ராமச்சந்திரன், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற கர்நாடக அரசிற்கு, தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக பேசிய சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் டி.லதா, தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தார். இச்சம்பவத்தில் தொடர்புடைய வனத்துறை அதிகாரிகள் பணி நீக்கம் செய்து, கைது செய்யப்பட வேண்டும்; கொல்லப்பட்டவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

இதை தொடர்ந்து, பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு அரசு நிவாரணம் குறித்து கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார், 3 தமிழர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், விரைவில் நிவாரணம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.