முந்தய பக்கம்

கர்நாடகா: இறுதி வாக்காளர் பட்டியலில் 99.3 லட்சம் பேர் நீக்கம்!

27 Oct 2026, 4:41 pm
கர்நாடகா: இறுதி வாக்காளர் பட்டியலில் 99.3 லட்சம் பேர் நீக்கம்!
<p>கர்நாடகாவில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு பிறகு இன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் 99.32 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. </p><p>கர்நாடகாவின் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. அதில், 99.32 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. </p><p>எஸ்.ஐ.ஆருக்கு முன்பு, 5.54 கோடியாக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை, தற்போது 4.55 கோடியாகக் குறைந்துள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 1.07 கோடி வாக்காளர்களில், 8.64 லட்சம் வாக்காளர்கள் பரிசீலனைக்குப் பிறகு சேர்க்கப்பட்டுள்ளனர். </p><p>இறுதி வாக்காளர் பட்டியலில் 2.25 கோடிக்கும் அதிகமான ஆண்கள், 2.29 கோடிக்கும் அதிகமான பெண்கள் மற்றும் 2,841 மூன்றாம் பாலினத்தவர் உள்ளனர். இதில் 18 மற்றும் 19 வயதுடைய 6.83 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களும், 85 வயதிற்கு மேற்பட்ட 3.92 லட்சத்திற்கும் அதிகமான நபர்களும் அடங்குவர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram