கர்நாடகத்தில் பரபரப்பு முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா
28 May 2026, 9:37 pm

கர்நாடகத்தில் பரபரப்பு முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா

கர்நாடகாவில் 2023ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜ கவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. முதலமைச்சராக சித்தராமை யாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் பதவியேற்றனர். பதவி யேற்கும் போதே முதலமைச்சர் பதவிக்காக சித்தராமையாவுக்கும், டி.கே.சிவக்குமா ருக்கும் போட்டி ஏற்பட்டது. மோதலுக்கு தீர்வு கண்ட காங்கிரஸ் மேலிடம் சித்தராமையா வுக்கும்,டி.கே.சிவக்குமாருக்கும் இரண்டரை ஆண்டுகள் ஆட்சிஎன்ற ரகசிய ஒப்பந்தம் செய்ததாகச் செய்திகள் வெளியாகின. ஆனால் இது உண்மையல்ல என்று சித்தரா மையாவும், டி.கே.சிவக்குமாரும் மறுத்தனர்.

சலசலப்பு

இதற்கிடையே கடந்த சில நாட்களாக, அதாவது சரியாக இரண்டரை ஆண்டுகள் கழித்து, டி.கே.சிவக்குமார் முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற குரல்கள் கர்நாடகாவில் எழத் தொடங்கின. அந்தக் குரல்களை ‘தலைமை முடிவு செய்யும்’ என்கிற ஒற்றைப் பதிலால் கடந்து சென்றார் சித்தராமையா. டி.கே.சிவக் ்குமாரும் இதே பதிலைத் தான் கூறி வந்தார்.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக தில்லி காங்கிரஸ் அலுவலகத்தில் ‘கர்நாடகா முதலமைச்சர் யார்?’ என்ற தொடர் சந்திப்பு களும், கூட்டங்களும் நடந்துகொண்டே இருந்தன. அதன் முடிவில், சித்தராமையா முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவார் என்று முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி வியாழனன்று அவரது வீட்டில் நடந்த காலை விருந்திற்குப் பிறகு தன்னுடைய முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வ தாக சித்தராமையா அறிவித்தார்.

ராஜினாமா

வியாழனன்று மாலை ஆளுநர் மாளிகை யில் தன் ராஜினாமா கடிதத்தை,சித்தராமையா வழங்கினார். ஆளுநர் தாவர்சந்த் கெலாட் சொந்த மாநிலம் சென்றுவிட்டதால், அவரின் சிறப்புச் செயலர் பிரபு சங்கர் ராஜினாமா கடி தத்தை பெற்றுக் கொண்டார். இதனை யடுத்து வெள்ளியன்று டி.கே.சிவக்குமார் முதலமைச்சராக பதவியேற்பார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனிடையே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள சித்தராமையாவிற்கு மாநிலங்களவை சீட்டும், அவரது மகனுக்கு மாநி லத்தில் அமைச்சர்பதவியும் கொடுக்கப்பட உள்ளது எனத் தகவல்கள் வெளியாகின.

மறுப்பு

ஆனால் இதற்கு சித்தராமையா மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசுகையில்,“கர்நாடக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டேன். எனக்கு மாநிலங்களவை பதவி தர கட்சி மேலிடம் முன்வந்தது.

ஆனால், நான் மறுத்து விட்டேன். எனக்கு தேசிய அரசியலில் விருப்பமில்லை. கர்நாடக மக்களுக்கு நான் தொடர்ந்து சேவை செய்வேன். மதவாதசக்திகளுக்கு எதிராக நான் போராடு வேன். அரசியல் சாசனத்திற்கு எதிரானவர்களை எதிர்த்து, எனது கடைசி மூச்சு இருக்கும் வரை தொடர்ந்து போராடுவேன். நான் முதல மைச்சர், எதிர்க்கட்சி தலைவர், எம்எல்ஏ, துணை முதலமைச்சர் மற்றும் உள்ளூர் அளவில் பிற பதவிகளையும் வகித்து இருக்கிறேன்” என அவர் கூறினார்.