கம்பீரமாக எழுந்தார் காரல் மார்க்ஸ்
6 Feb 2026, 4:54 pm
<p><strong>கம்பீரமாக எழுந்தார் காரல் மார்க்ஸ்</strong></p>
<p>சென்னை, பிப். 6 - ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என்று உலக மாந்தநேயத்தையும், ‘எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்தலாலே, இல்லாரும் இல்லை... உடையாரும் இல்லை மாதோ!’ என்று வர்க்க பேதமற்ற - எல்லாருக்கும் எல்லா வளமும் கிடைக்கக் கூடிய பொதுவுட மைச் சமுதாயக் கண்ணோட்டத்தையும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே முன்மொழிந்தது தமிழ்நிலப் பரப்பு. அத்தகைய சுரண்டலற்ற சமு தாய அமைப்பு, கனவாகவும் கற்பனை யாகவும் மட்டுமே இருந்து வந்த நிலை யில், அந்த உயரிய சமுதாய அமைப்பை அடைவதற்கான சமூக - பொருளாதார - அரசியல் நடைமுறைத் தத்துவத்தை உலகிற்கு அளித்தவர் தான், மாமேதை காரல் மார்க்ஸ். அதன் காரணமாக, வரலாற்றின் போக்கு மாறியது; உலக வரைபடங்கள் மாறின; ‘உழைப்பவர்க்கே உலகம்!’ என்ற முழக்கம் உலகம் எங்கும் எதி ரொலித்தது. இன்றும், பொருளாதாரம், சாதி, மதம், இனம், மொழி, நிறம், பாலினம் என அனைத்து விதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகவும் மார்க்ஸ் முன்வைத்த கருத்தாயுதமே மனிதர்கள் மாண்புடன் வாழ்வதற்கான</p>
