தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மார்க்ஸ் சிலைக்கு செவ்வணக்கம்! சிபிஎம், சிபிஐ, விசிக தலைவர்கள் பங்கேற்பு

5 May 2026, 9:52 pm
மார்க்ஸ் சிலைக்கு செவ்வணக்கம்! சிபிஎம், சிபிஐ, விசிக தலைவர்கள் பங்கேற்பு

மார்க்ஸ் சிலைக்கு செவ்வணக்கம்! சிபிஎம், சிபிஐ, விசிக தலைவர்கள் பங்கேற்பு

சென்னை, மே 5 - ஆண்டான் - அடிமை, ஏழை - பணக்காரன், உயர்ந்தவன் - தாழ்ந்த வன் என்ற சுரண்டல் அமைப்பை ஒழித்து, மனிதர்கள் அனைவரும் அனைத்து நிலையிலும் சரிநிகர் சமானமாகவும் - கண்ணியத்துட னும் வாழ்வதற்கு கம்யூனிசம் எனும் தத்துவத்தை உலகிற்கு அளித்த மாமேதை காரல் மார்க்சின் 208-ஆவது பிறந்த நாள் (மே 5) செவ்வாய்க்கிழமை கொண்டாடப் பட்டது.

இதனையொட்டி சென்னை எழும்பூர் கன்னிமாரா அருங்காட்சி யக வளாகத்தில் உள்ள அவரது உரு வச் சிலைக்கு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் பெ. சண்முகம், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் மு. வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட் டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பெ. சண்முகம்

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், “உலகின் தலை சிறந்த சிந்தனையாளராக இன்றும் போற்றப்படுபவர் மாமேதை காரல் மார்க்ஸ். உழைக்கும் மக்க ளுக்கான அவரது தத்துவத்தை உழைப்பாளி மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் மார்க்சியவாதி களின் அடிப்படை கடமை. அவரது சிலை முன்பு அதற்கான உறுதி யை ஏற்கிறோம். உலகம் முழு வதும் உள்ள பாட்டாளிகள் விடு தலை, முன்னேற்றம் பெறுவதற் கான முறையில் அதனை பரப்பு வதற்கும் வளர்த்தெடுப்பதற்கும் இடதுசாரிகள் தொடர்ந்து பாடுபடு வோம்” என்றார்.

மு. வீரபாண்டியன்

சிபிஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கூறுகையில், “மார்க்ஸ், சோவியத் புத்த கங்கள் தடை செய்யப்பட்ட அதே கன்னிமாரா நூலக வளாகத்தில் காரல் மார்க்சின் சிலை அமைக்கப் பட்டுள்ளது. பகுத்தறிவாளர்கள், விடுதலைக் கருத்துக்கள், மானு டத்தின் மதிப்புமிக்க கருத்துக் களை வெல்ல எந்த ஆயுதமும் இல்லை என்பதற்கு மார்க்ஸ் சாட்சியாக உள்ளார்.

போர்கள் அற்ற, நீதி நிறைந்த, அடக்குமுறையும் அநீதியும் இல்லாத உலகம், மானுடத்தின் விடு தலை என்ற சொல், சிந்தனை இருக்கும் வரை மார்க்ஸ் வாழ்வார். அவரது திசைதான் மானுடத்தின் திசை. அந்த திசையில் பயணிப்போம். மார்க்சியம் வெல்லும்” என்றார்.

தொல். திருமாவளவன்

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் குறிப்பிடுகையில் “காரல் மார்க்ஸ் பிறந்த நாள், பண்டிதர் அயோத்திதாசரின் நினைவு நாள். இந்த மாமனிதர்களுக்கு செம்மார்ந்த அஞ்சலியை செலுத்துகிறோம். தேர்தல் முடிவு, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், அதிமுக-பாஜக தலைமையிலான சங்-பரிவார் அரசியலை வீழ்த்தியுள்ளது. அந்த வகையில் நாங்கள் எடுத்த முயற்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ளதற்காக மகிழ்ச்சி அடைகிறோம். வாக்களித்த தமிழ்மக்களுக்கு மகிழ்ச்சியை உரித்தாக்குகிறோம்” என்றார்.

இடதுசாரிகளுடன் இணைந்தே முடிவெடுப்போம்

சட்டமன்றத் தேர்தலில் தவெக கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் விசிக, இடதுசாரிகள் இணைந்து ஆதரவு தருவீர்களா? என்பன உள்ளிட்ட செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், “இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நீண்டகாலமாக மதச்சார்பற்ற அரசியல் களத்தில் இணைந்து பயணித்து வருகிறோம். எதிர்காலத்திலும் முக்கியமான அரசியல் முடிவுகளை இணைந்தே எடுப்போம். தற்போது எழுப்பிய கேள்வி குறித்து இதுவரை சிந்திக்கவில்லை. முடிவெடுக்கவில்லை. யூகமான கேள்விகளுக்கு யூகமாக பதிலளிக்க இயலாது” என்றார்.

உ. வாசுகி - ஜி. ராமகிருஷ்ணன்

இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ. வாசுகி, மத்தியக் கட்டுப்பாட்டுக் குழு தலைவர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ், மாவட்டச் செயலாளர்கள் ஜி. செல்வா (மத்திய சென்னை), எம். ராமகிருஷ்ணன் (வடசென்னை), மாநிலக்குழு உறுப்பினர்கள் எல். சுந்தரராஜ், வெ. ராஜசேகரன், சிபிஐ தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் இரா. முத்தரசன், மாநில துணைச் செயலாளர் என். பெரியசாமி, விசிக பொதுச்செயலாளர்கள் ம. சிந்தனைச்செல்வன், து. ரவிக்குமார் எம்பி., பொருளாளர் எஸ்.எஸ். பாலாஜி, துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.