தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மானுடம் போற்றும் மாமேதை காரல் மார்க்ஸ் 208-ஆவது பிறந்தநாள் விழா உற்சாகம்

6 May 2026, 1:07 am
மானுடம் போற்றும் மாமேதை காரல் மார்க்ஸ் 208-ஆவது பிறந்தநாள் விழா உற்சாகம்

மானுடம் போற்றும் மாமேதை காரல் மார்க்ஸ் 208-ஆவது பிறந்தநாள் விழா உற்சாகம்

சேலம், மே 5- வரலாறு என்பது வர்க்கப் போராட்டங்களின் தொகுப்பு என்று முழங்கி, உலகத் தொழிலாளர் வர்க் கத்தின் விடிவெள்ளியாய் உதித்த வர் மாமேதை காரல் மார்க்ஸ்.

மனித குலத்தின் சிந்தனைப் போக்கையே மாற்றியமைத்த அந்த புரட்சிகர மேதையின் 208-ஆவது பிறந்த நாள் விழா, செவ்வாயன்று உல கெங்கும் எழுச்சிகரமாக கொண் டாடப்பட்டு வருகிறது.

மார்க்ஸ் வெறும் பொருளாதார வல்லுநர் மட்டுமல்ல; அவர் சுரண் டப்படும் உழைக்கும் மக்களின் இதயத் துடிப்பு.

தத்துவவாதிகள் இதுவரை உலகத்தை விளக்கி யிருக்கிறார்கள், ஆனால் தேவையோ அதை மாற்றுவதுதான் என்ற அவரது வைர வரிகள், உல கெங்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் கைகளில் விடுதலையினை ஏந்திச் செல்லும் ஆயுதங்களாக மாறின.

அவர் விதைத்த பொதுவுடைமைத் தத்துவம், தனிமனித லாபத்தை விட சமூக நீதியையும், ஏற்றத்தாழ் வற்ற சமத்துவத்தையும் முன்னி றுத்தியது.

இன்று மார்க்சிய இயக்கங்கள் உலகெங்கும் அந்த ஒளியை ஏந்திச் செல்கின்றன.

இந்தியாவில், குறிப் பாக தமிழகத்தில், எளிய மக்க ளின் உரிமைக்காகவும், சமூக நீதிக் காகவும், உழைப்பாளிகளின் வியர் வைக்கு விலை கேட்டும் களமாடும் மார்க்சிஸ்ட் கட்சியினர், காரல் மார்க்ஸின் பிறந்தநாளை வெறும் சடங்காக அன்றி, ஒரு மாபெரும் புரட்சிகரப் பயணத்தின் தொடர்ச்சி யாக கொண்டாடுகின்றனர்.

கார்ப் பரேட் ஆதிக்கமும், சமூகப் பிரி வினைகளும் மேலோங்கியுள்ள நவீன உலகில், மார்க்ஸ் காட்டிய பொதுவுடைமைப் பாதை முன் னெப்போதையும் விட இன்று மிக அவசியமான தேவையாக மாறி யுள்ளது.

அந்த தீரமிக்க சிந்தனை யாளரின் பிறந்தநாளை ஒட்டி தமி ழகத்தின் பல்வேறு பகுதிகளில் எழுச்சிமிகு நிகழ்வுகள் நடைபெற் றது.

இதன்ஒருபகுதியாக, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டக் குழு அலுவலகமான சேலம் சிறை தியாகிகள் நினைவ கத்தில் மாவட்ட செயற்குழு உறுப் பினர் எஸ். எம் தேவி தலைமையில் கொண்டாடப்பட்டது

. வளாகத்தில் உள்ள காரல் மார்க்ஸ் சிலைக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ. ராமமூர்த்தி மாலை அணிவித்து மரி யாதை செய்தார்.

மூத்த தலைவர் ஆர். வெங்கடாபதி சிறப்புரையாற் றினார்.

இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.ராஜாத்தி, எம். கனகராஜ், என்.பிரவீன் குமார், வாழப்பாடி தாலுகா செயலாளர் பூபதி உள்ளிட்டு பலர் பங்கேற்ற னர்.

மேட்டூர் சின்ன பார்க் சிஐடியு அலுவலகம் முன்பு மாமேதை காரல் மார்க்ஸ் அவர்களின் உருவப்படம் வைத்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், கட்டிட தொழிலாளர் சங்க மாவட்டச் செய லாளர் செ. கருப்பண்ணன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.எம்.தேவி உள்ளிட்டோர் பங் கேற்றனர். கோவை கோவை முற்போக்கு வழக்கறி ஞர்கள் சார்பாக கோயமுத்தூர் மாவட்ட நீதிமன்ற நுழைவு வாயில் எண்.4 முன்பாக நடைபெற்றது.

இதில் வழக்கறிஞர்கள் திரளாக பங்கேற்றனர்.

விழாவில் கலந்து கொண்ட வர்களுக்கு மாமேதை காரல் மார்க் ஸின் நூல்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் அகில இந்திய வழக் கறிஞர்கள் சங்க மாவட்டத் தலை வர் ராமர், மாவட்டச் செயலாளர் ஜோதி குமார், மக்கள் சிவில் உரிமை கழகம் தேசிய செயலாளர் பாலமுருகன், பீப்பிள் வாட்ஸ் சார் பில் நிக்கோலஸ், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாவட்ட நிர் வாகிகள் ராஜசிம்மன், கரீம், இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சுப் பிரமணியன் மற்றும் இளம் வழக் கறிஞர்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

தருமபுரி கார்ல் மார்க்ஸ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப் படத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாலை வைத்து மரியாதை செலுத் தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஏ.குமார், மாவட் டச் செயலாளர் இரா.சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் எம்.மாரிமுத்து, தி.வ.தனுசன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே. என். மல்லையன், டி.எஸ்.ராமச்சந் திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் மாவட்டச் செயலாளர் த. கு. பாண்டியன், சிபிசிஐடி(எம்.எல்) கட்சியின் மாவட்ட செயலாளர் கே.

கோவிந்தராஜ் ஆகியோர் பங் கேற்று பேசினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.