கரிசலூர்-மயிலப்புரம் சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை
17 May 2026, 10:30 pm

கரிசலூர்-மயிலப்புரம் சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை

தென்காசி, மே 17- தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் வெங்கடாம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கரிசலூரில் இருந்து மயிலப்புரம் செல்லும் சாலை ஆபத்தான முறை யில் குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலை அமைக்கப்படும் போது முழுமையாக போடப்பட வில்லை.அதனால் இந்த சாலையில் பயணிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. ஆதலால் பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக இந்த சாலையை மக்கள் பயன்படுத்தும் வண்ணம் தார்ச்சாலையாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் இயற்கை வள பாதுகாப்பு அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.