முந்தய பக்கம்

அரசு கல்லூரியில் இன்று கலந்தாய்வு

4 Jun 2026, 10:34 pm
அரசு கல்லூரியில் இன்று கலந்தாய்வு
<p>தருமபுரி, ஜூன் 4-</p><p>காரிமங்கலம் அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளில் மாணவியர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வெள்ளியன்று (இன்று) தொடங்கவுள்ளது.</p><p>இதுகுறித்து அக்கல்லூரியின் முதல்வர் அலுவலகம் புதனன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டுக்கான இளநிலை பாடப்பிரிவுகளில் மாணவியர் சேர்க்கை தொடங்கி நடைபெற உள்ளது. இதில் ஜூன் 5 ஆம் தேதி (இன்று) சிறப்பு ஒதுக்கீடு பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் பிள்ளைகள், தேசிய மாணவர் படை ஆகியோருக்கு அனைத்து பாடப் பிரிவுகளுக்கான சேர்க்கை கலந்தாய்வு நடைபெறவுள்ளது. தொடர்ந்து, ஜூன் 8 ஆம் தேதி முதல் ஜூன் 18 ஆம் தேதி வரை பொது கலந்தாய்வு பி.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, பி.காம்., பிபிஏ., பிசிஏ., பி.எஸ்சி., கணிதம், வேதியியல், கணினி அறிவியல், புள்ளியியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டியல், காட்சித் தொடர்பியல் ஆகிய பாடப்பிரிவுகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற </p><p>உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram