விவசாயிகள் சங்க காரிமங்கலம் வட்ட மாநாடு
1 hour before
<p><strong>விவசாயிகள் சங்க காரிமங்கலம் வட்ட மாநாடு</strong></p><p>தருமபுரி, ஆக.14-விவசாயிகள் சங்க காரிமங்கலம் வட்ட மாநாட்டில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.</p><p>தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்ட 14 ஆவது மாநாடு, காரிமங்கலத்தில் வெள்ளியன்று நடைபெற்றது. வட்டத் தலைவர் பி.பி.ராஜா தலைமை வகித்தார். வட்ட நிர்வாகி கே.வி.முருகேசன் மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார். மாவட்டச் செயலாளர் சோ.அருச்சுனன் துவக்கவுரையாற்றினார். வட்டச் செயலாளர் பி.மாது அறிக்கையை முன்வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் பி.காரல் மார்க்ஸ், கறிக்கோழி வளர்ப்போர் சங்க நிர்வாகி எம்.குப்புசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில், பூனாத்தனஅள்ளி, புதூர் ஆகிய கிராமங்களுக்கு சொந்தமான ஏரியில் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும், பல்வேறு கிராம ஏரிகளில் மண் மற்றும் நரம்பு மண் கடத்தப்பட்டு, ரியல் எஸ்டேட் பயன்பாட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனை வருவாய்த்துறை அலுவலர்கள் தடுத்து, கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும். ஒகேனக்கல் குடிநீரை அனைத்து கிராமங்களுக்கும் சீராக வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் வட்டத் தலைவராக பி.பி.ராஜா, செயலாளராக பி.மாது, பொருளாளராக எம்.அறிவழகன் உட்பட 9 வட்டக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் கே.என்.மல்லையன் நிறைவுரையாற்றினார்.</p>
