நீட் மறுதேர்வுக்குத் தயாராகி வந்த கார்கில் போர் தியாகியின் மகள் தற்கொலை
17 Jun 2026, 8:34 pm

நீட் மறுதேர்வுக்குத் தயாராகி வந்த கார்கில் போர் தியாகியின் மகள் தற்கொலை

உத்தரகண்ட் மாநி லம் டேராடூனில் நீட் மறுதேர்வு க்குத் தயாராகி வந்த 23 வயது இளம் பெண், தனது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டுள் ளார். உயிரிழந்த பெண், 1999- ஆம் ஆண்டு கார்கில் போரில் இந்தியாவிற்காக சேவை யாற்றிய ராணுவ வீரரின் மகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

நீட் உள்ளிட்ட ஒன்றிய அரசின் தேர்வுகளில் நடைபெறும் மோச டிகளால் நாடுமுழுவதும் மாண வர்கள் மிகப்பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக தேர்வு வியாபாரமய மாகி வருவதும் அதில் அரங்கேறும் மோசடிகளாலும் மன உளைச்சலுக்கு ஆளாகும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் கொடுமை தொடர்ந்து வருகிறது.

உத்தரகண்ட் மாநில காவல் ்துறையினரின் கூற்றுப்படி, செவ்வாய்க்கிழமை அன்று மதிய உணவிற்காக அம்மாணவி யின் தாய் அவரை அழைக்கச் சென்றபோது அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.

மாணவியின் அறையிலி ருந்து தற்கொலைக் குறிப்பு ஒன்றை காவல்துறையினர் எடுத் துள்ளனர். அதில், ஐ லவ் யூ, மம்மி, பப்பா. இதில் யாருடைய தவறும் இல்லை என அவர் இந்தியில் உருக்கமாக எழுதி இருந்ததாக ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.