திருச்சி விரைவு செய்திகள்
6 Jul 2026, 9:40 pm

நிதிநிறுவன அதிபரிடம் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல் பெண் உள்பட இருவர் கைது

திருப்பத்தூர், ஜூலை 6- சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே தம்பி பட்டியைச் சேர்ந்த நிதிநிறுவன அதிபர் வடிவேல் (40) என்பவரிடம் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டி தாக்குதல் நடத்திய வழக்கில், பெண் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். வடிவேலை கடந்த மாதம் கைபேசி மூலம் தொடர்பு கொண்ட கவிதா என்பவர், நட்பாகப் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாகக் கூறி, கடந்த ஜூன் 9-ஆம் தேதி ஜி-பே மூலம் வடிவேலிடம் இருந்து ரூ.4,500 பெற்றுள்ளார். இதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூன் 24-ஆம் தேதி வடி வேலை காரைக்குடிக்கு வரவழைத்த கவிதா, தனிமையில் பேசலாம் என்று கூறி பழைய ஓட்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே மறைந்திருந்த கும்பல், வடிவேலை வலுக்கட்டாயமாக நிர்வாணமாக்கி தாக்கியது டன், ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும், அவரிடமிருந்த இருசக்கர வாகனம் மற்றும் செல் போனையும் பறித்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து வடிவேல் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். காரைக்குடி புதிய பேருந்து நிலையம் தொடங்கி 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து, முதல் குற்றவாளியான கவிதா மற்றும் அவ ருக்கு உடந்தையாக இருந்த தமிழ்ச்செல்வன் ஆகிய இரு வரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் மூன்று பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

பணி நிரந்தரம் கோரி மனு

சிவகங்கை, ஜூலை 6- தமிழ்நாடு தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் கீழ் பணி யாற்றி வரும் பரப்புரையாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கி, பணியிடை நீக்கம் செய்யாமல் தொடர்ந்து பணி யில் அமர்த்த வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சி யரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் பேரூராட்சிகள் மற்றும் நக ராட்சிகளில், தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் கீழ் தற்போது அனிமேட்டர்கள் (பரப்புரையாளர்கள்) பணி யாற்றி வருகின்றனர். இவர்களை சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனங்கள் பணியிடை நீக்கம் செய்யாமல் தொடர்ந்து பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஒப்பந்ததாரர்கள் மாறினாலும் பேரூராட்சி கள் மற்றும் நகராட்சிகளில் பணிபுரியும் பரப்புரையாளர் களுக்கு பணி நிரந்தரம் வழங்கி, பணியிடை நீக்கம் செய்யா மல் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்த அரசு உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத் தப்பட்டுள்ளது.

இலவச பொது மருத்துவ முகாம்

திருவில்லிபுத்தூர், ஜூலை 6- திருவில்லிபுத்தூர் பூவாணி பகுதியில் ஸ்டார் பிரண்ட்ஸ் ரோட்டரி கிளப், தாலுகா நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் குருவம்மாள் சாரிடபிள் டிரஸ்ட் மருத்து வமனை ஆகியவை இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு ஸ்டார் பிரண்ட்ஸ் தலைவர் அசோக்குமார் மற்றும் திருவில்லிபுத்தூர் தாலுகா நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் தோத்தாத்ரி ஆகியோர் தலைமை தாங்கினர். இரு அமைப்புகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டு முகாமை சிறப்பாக நடத்தினர். முகாமில் சிறப்பு விருந்தினர்களாக ரோட்டரி சங்கத் தின் முன்னாள் தலைவர் கந்தசாமி, முன்னாள் துணைத் தலைவர் நாகராஜ் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகி முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குடிநீர் வசதி இல்லாததால் மக்கள் அவதி

இராமநாதபுரம், ஜூலை 6- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கூட்டத்திற்கு வரும் பொதுமக்களின் பயன் பாட்டிற்காக அமைக்கப்பட்டிருந்த குடிநீர் தொட்டிகளில் கடந்த சில வாரங்களாக குடிநீர் நிரப்பப்படாததால், குடிநீர் வசதி இல்லாமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக, கடும் வெயில் நிலவும் சூழலில் நீண்ட நேரம் காத்தி ருக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்காததால் அவதியடைந்து வருகின்றனர். உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா?

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ரெடிமேட் கான்கிரீட் ஆலை: தடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

விருதுநகர், ஜூலை 6- விருதுநகர் அருகே இனாம்ரெட்டிய பட்டியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற் படுத்தக்கூடிய ரெடிமேட் கான்கிரீட் கலவை தயாரிப்பு ஆலையை அமைப்பதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: விருதுநகர் வட்டத்திற்கு உட்பட்ட பட்டம் புதூர் அருகே தனியாருக்குச் சொந்தமான ரெடிமேட் கான்கிரீட் கலவை தயாரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது. அந்த ஆலை யால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபடு வதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அதே நிறுவனம் இனாம் ரெட்டியபட்டி பகுதியில் புதிய ஆலை அமைக்கும் பணியை மேற்கொண்டு வரு கிறது. ஆலை அமையவுள்ள இடத்தின் அருகே தொழிற்பயிற்சி மையம், போதை மறுவாழ்வு மையம், உயர்நிலைப் பள்ளி, விவசாய நிலங்கள் மற்றும் மேய்ச்சல் நிலங் கள் உள்ளன. அங்கு ஆலை அமைக்கப் பட்டால், சுற்றுச்சூழலுடன் சேர்த்து விவ சாய நிலங்கள், மேய்ச்சல் நிலங்கள் மற்றும் மாணவர்களின் உடல்நலனும் பாதிக்கப் படும். எனவே, இனாம்ரெட்டியபட்டியில் ரெடி மேட் கான்கிரீட் கலவை தயாரிப்பு ஆலை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு வில் வலியுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.ராஜேந்திரன், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் பெருமாள்ராஜ், பழனியப்பன், பீமாராவ் உள்ளிட்டோர் மனுவை வழங்கினர்.

100 நாள் வேலைத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு

மானாமதுரை, ஜூலை 6- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்ன கண்ணனூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மானாமதுரை ஒன்றியக் குழு சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது: சின்னகண்ணனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் முதல் முறையாக செயல்படுத்தப்படவில்லை. தற்போது வாரத்திற்கு 2 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி, பதிவு செய்துள்ள அனை த்து தொழிலாளர்களுக்கும் தொடர்ந்து வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சின்னகண்ணனூர் கிராமத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவு வதால், பொதுமக்கள் ஒரு குடம் தண்ணீரை ரூ.10 கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. கிராமத்தில் பல இடங்களில் தெருவிளக்குகளும் எரியாமல் உள்ளதால், அவற்றையும் உடனடியாக சீர மைக்க வேண்டும் என்று மனுவில் வலி யுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, மானாமதுரை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் (வட்டார வளர்ச்சி அலுவலர்) முத்துக்குமாரை சந்தித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றி யச் செயலாளர் முனிராஜ், சின்னகண்ண னூர் கிளைச் செயலாளர் முத்துச்சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செய லாளர் முத்துராமலிங்கம், ஒன்றியத் தலை வர் பரமாத்மா பாலசுந்தர் ஆகியோர் மனு வை வழங்கினர். மனுவைப் பெற்றுக்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.