தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

காரைக்குடி ஆவின் முன்பு கொட்டும் மழையிலும் பால் உற்பத்தியாளர்கள் காத்திருப்புப் போராட்டம்

5 Nov 2026, 10:49 pm
காரைக்குடி ஆவின் முன்பு கொட்டும் மழையிலும்  பால் உற்பத்தியாளர்கள் காத்திருப்புப் போராட்டம்

காரைக்குடி ஆவின் முன்பு கொட்டும் மழையிலும் பால் உற்பத்தியாளர்கள் காத்திருப்புப் போராட்டம்

சிவகங்கை, நவ.5-பால் உற்பத்தியாளர் களுக்கு போனஸ் வழங்கக் கோரி, தமிழ்நாடு பால் உற் பத்தியாளர் சங்கம் சார்பில் காரைக்குடி ஆவின் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.மாநிலச் செயலாளர் பி.பெருமாள், மாநிலத் தலைவர் வெண்மணிசந்திரன், மாவட்டத் தலைவர் எஸ்.காந்திமதி, மாவட்டப் பொரளாளர் எம்.நீலமேகம், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே.வீரபாண்டி, மாவட்ட பொருளாளர் ஏ.ஆறுமுகம், திருப்பத்தூர் தாலுகா செயலாளர் எஸ்.முருகேசன், சிஐடியு மாவட்டச் செயலாளர் சேதுராமன், மாவட்ட துணைச் செயலாளர் தட்சிணாமூர்த்தி, மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்ஆவின் பொதுமேலாளருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரைச் சந் தித்து நடத்திய பேச்சுவார்த்தையிலும் தீர்வு எட் டப்படவில்லை. இதனால், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆவின் அலுவலகம் முன்பு பால் உற் பத்தியாளர்களின் காத்திருப்புப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.