125 நாட்கள் வேலையை முழுமையாக வழங்க வேண்டும் காரைக்கால் விதொச மாநாடு வலியுறுத்த
11 Oct 2026, 1:25 am

125 நாட்கள் வேலையை முழுமையாக வழங்க வேண்டும் காரைக்கால் விதொச மாநாடு வலியுறுத்தல்

புதுச்சேரி, அக்.10-காரைக்கால் மாவட்டத்தில் 125 நாட்கள் வேலையை முழுமையாக வழங்க வேண்டும் என்று விவசாய தொழிலாளர் சங்க மாநாடு புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட 8ஆவது மாநாடு, மாவட்ட தலைவர் பூபேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டை துவக்கி வைத்து சங்கத்தின் மூத்த தலைவர் என்.எம்.கலியபெருமாள் பேசினார். வேலை அறிக்கையை மாவட்ட செயலாளர் அழகப்பன் வாசித்தார். மாநாட்டை நிறைவு செய்து அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் புதுச்சேரி மாநில செயலாளர் தமிழ்ச்செல்வன் பேசினார்.

நிர்வாகிகள் தேர்வு

மாநாட்டில் காரைக்கால் மாவட்ட தலைவராக பூபேஷ்குமார், செயலாளராக ராஜேந்திரன், பொருளாளராக பால்ராஜ் உட்பட 17 பேர் கொண்ட மாவட்ட குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

விவசாய தொழிலாளர்களுக்கு 125 நாள் வேலையை முழுமையாக வழங்க வேண்டும். திட்டத்திற்காக புதுச்சேரி மாநிலத்திற்கு ஒன்றிய பாஜக அரசு வழங்க வேண்டிய ரூ. 300 கோடி நிதியை, உடனே வழங்க வேண்டும். வேலை தளத்தில் கருவிழி படப்பிடிப்பை உடனே கைவிட வேண்டும். விவசாய தொழிலாளர் நல சங்கத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.