தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மதுரை மாநகர காவல் ஆணையராக கபில்குமார் சரத்கர் பொறுப்பேற்பு

7 Jun 2026, 11:10 pm
மதுரை மாநகர காவல் ஆணையராக கபில்குமார் சரத்கர் பொறுப்பேற்பு

மதுரை மாநகர காவல் ஆணையராக கபில்குமார் சரத்கர் பொறுப்பேற்பு

மதுரை, ஜூன் 7- மதுரை மாநகரின் புதிய காவல் ஆணையராக கபில் குமார் சரத்கர் ஞாயிற்றுக் கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதையடுத்து காவல் ஆணையர் அலுவ லகத்திற்கு வருகை தந்த அவருக்கு காவல்துறை யினர் அணிவகுப்பு மரி யாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய காவல் ஆணையர் கபில்குமார் சரத்கர், மதுரை மாநகரில் ஏற் கனவே பணியாற்றிய அனு பவம் இருப்பதாக தெரிவித் தார்.

பொதுமக்கள் அளிக் கும் புகார்கள் மீது உடனடி மற்றும் துரிதமான நடவ டிக்கைகள் மேற்கொள்ளப் படும் என உறுதியளித்தார்.

மாநகரில் போதைப் பொருள் விற்பனையை ஒழிக்கவும், ரௌடிசம் மற்றும் சாதி அடிப்படையி லான குற்றச் செயல்களை கட்டுப்படுத்தவும் காவல் துறை தொடர்ந்து தீவிர நட வடிக்கைகளை மேற்கொள் ளும் என்று அவர் கூறினார்.

மேலும், அதிகரித்து வரும் சைபர் குற்றங்களைத் தடுக்க சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்றும், இணைய வழி

மோசடிகள் மற்றும் நிதி குற்றங்கள் தொடர்பாக பொதுமக்க ளுக்கு விழிப்புணர்வு ஏற் படுத்தப்படும் என்றும் தெரி வித்தார். போக்குவரத்து நெரி சலை குறைக்கும் நடவ டிக்கைகளும் முன்னெடுக் கப்படும் என்றும், பொது மக்கள் போக்குவரத்து விதி முறைகளை கடைப்பிடிப் பதை உறுதி செய்ய காவல் துறை கண்காணிப்பு அதி கரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அத்துடன், “புட் பேட் ரோல்” முறையில் காவல் துறையினர் மக்கள் அதிகம் கூடும் பகுதிகள், வணிக வளாகங்கள் மற்றும் குடி யிருப்பு பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மாநகர சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்கு வரத்து மற்றும் தலைமை யிடப் பிரிவுகளின் துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்களுடன் புதிய காவல் ஆணையர் ஆலோசனைக் கூட்டம் நடத் தினார்

. இதில் நகரின் சட்டம்-ஒழுங்கு நிலை, குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்கள் பாது காப்பு தொடர்பான அம்சங் கள் குறித்து விவாதிக்கப்பட் டதாக காவல்துறை வட்டா ரங்கள் தெரிவித்தன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.