தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கிரிகெட்டுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் தருவது நியாயமற்றது சென்னையில் நூல் வெளியீட்டு விழாவில் கபில் தேவ் பேச்சு

30 May 2026, 2:04 am
கிரிகெட்டுக்கு மட்டும் அதிக  முக்கியத்துவம் தருவது நியாயமற்றது சென்னையில் நூல் வெளியீட்டு விழாவில் கபில் தேவ் பேச்சு
<p><strong>கிரிகெட்டுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் தருவது நியாயமற்றது சென்னையில் நூல் வெளியீட்டு விழாவில் கபில் தேவ் பேச்சு</strong></p><p>சென்னை, மே 29- சென்னை மேலாண்மை சங்கத்தின் அரங்கத்தில் நடந்த, வங்கியாளர் ஷியாம் சீனிவாசனின் ‘Better Never Stops’ புத்தக வெளியீட்டு விழாவில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய 67 வயதான கபில் தேவ், கிரிக்கெட் மீதான இந்தியாவின் அதீத ஆர்வம் குறித்துத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். “நான் ஒரு கிரிக்கெட் வீரராக இருந்தாலும், இந்த நாட்டைப் பொறுத்தவரை 99 சதவீத முக்கியத்துவத்தை கிரிக்கெட்டுக்கு மட்டுமே தருவது நியாயமற்றது. மற்ற விளையாட்டுகளும் அங்கீகாரம் பெற்றால் மட்டுமே நாடு முன்னேறும்,” என்று அவர் கூறினார். மேலும், சிறுவயதிலேயே குழந்தைகளை விளையாட்டுத் துறையிலிருந்து பிரித்து, படிப்பில் கவனம் செலுத்த வைக்கும் பெற்றோரின் மனநிலை மாற வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார். தனது தற்போதைய வாழ்க்கை குறித்துப் பேசிய கபில் தேவ், ஓய்வு நேரத்தில் கோல்ஃப் விளையாடுவதையும், திரைப்படங்கள் பார்ப்பதையும் விரும்புவ தாகக் கூறினார். குறிப்பாக, தென்னிந்தியத் திரைப்படங்களை ரசிப்பதாகக் குறிப்பிட்ட அவர், ‘பாகுபலி’ மற்றும் அல்லு அர்ஜு னின் திரைப்படங்களை விரும்பிப் பார்ப்ப தாகத் தெரிவித்தார். தற்போதைய இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “அவன் ஒரு தனித்துவமான திறமையுள்ள வீரர், ஆனால் அவனுக்கு நேரம் கொடுக்க வேண்டும்,” என்றார். 1983 உலகக்கோப்பை வெற்றி குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட அவர், வாழ்வின் சவால்களை எதிர்கொள்ள விரும்புபவர்களுக்கு, “எக்காரணத்தைக் கொண்டும் முயற்சியைக் கைவிடாதீர்கள்; நீங்கள் கைவிடும் அந்தத் தருணமே உங்கள் தோல்வியின் தொடக்கம்,” என ஊக்கமளிக்கும் அறிவுரையை வழங்கினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.