கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் நீர்வெளியேற்றத்தால் சேதமான சாலை குமரி மேற்கு கடற்கரை சாலையில் தொடர்
30 Jun 2026, 8:53 pm
<p><strong>கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் நீர்வெளியேற்றத்தால் சேதமான சாலை குமரி மேற்கு கடற்கரை சாலையில் தொடர் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுத்திடுக! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியரிடம் வலியுறுத்தல்</strong></p><p>நாகர்கோவில்,ஜூன் 30- குமரி மாவட்டம் மேற்கு கடற்கரை சாலையில் தொடர் விபத்து ஏற்படுகிறது. இதற்கு காரணமான கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் நீர்வெளியேற்றத்தை சரி செய்து, சாலையை சீரமைத்து விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து கட்சியின் ராஜாக்க மங்கலம் ஒன்றியச் செயலாளர் எஸ்.ற்றி. ராஜகுமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் என் எஸ் கண்ணன் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்டுள்ள தண்ணீர் கசிவால் மேற்குக் கடற் கரை சாலை குண்டும்குழியுமாக மாறியுள்ளது. இதனால் தொடர் விபத்துக்கள் நிகழ்ந்து வரு கின்றன. ராஜாக்கமங்கலம் ஒன்றி யத்தில் செல்லும் மேற்கு கடற்கரை சாலையின் அடிப்பகுதியில் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் பொருத்தப் பட்டு குடிநீர் விநியோகம் செய்யப் பட்டு வருகிறது. இதில் ராஜாக்க மங்கலம், தர்மபுரம், சத்தாமொழி பகுதிகளில் தொடர்ந்து குழாய்க ளில் வெடிப்பு ஏற்பட்டு தண்ணீர் கசிந்து வெளியே பாய்ந்து வரு கிறது. இதணல் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு வந்தன இது வாகன ஓட்டிகளுக்கும் பொது மக்களுக்கும் பெரிதும் பாதிப்பு களை ஏற்படுத்தி வந்தது. இதனை சரி செய்திட வலியுறுத்தி போராட்டங்களும் நடத்தப்பட்டன. இந்நிலையில் குடிநீர் வடிகால் வாரியம் இதில் தலையீடு செய்து குழாய்களில் நீர்க்கசிவு ஏற்படு வதை தடுக்கும் வகையில் சாலை யோரம் தரமான புதிய குடிநீர் குழாய்களை பதித்து வந்தது. மேற்படி புதிய குழாய் பொருத்தும் பணி கணபதிபுரம் முதல் ராஜாக்க மங்கலம் வழியாக தர்மபுரம் வரை நடைபெற்றுள்ளது. தற்போது இப்பணி நிறுத்தப்பட்டுள்ளது. சத்தாமொழி முதல் மணக்குடி வரை சாலை நடுவில் 50-க்கும் மேற்பட்ட குண்டும்குழிகள் ஏற் பட்டுள்ளன. இதில் வாகனங்கள் விழுந்து வாகன ஓட்டிகள் காயமடைகின்ற னர். இதனை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரி யிடம் தெரிவித்தும் உரிய நடவ டிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, குண்டும்குழியுமான சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும். சத்தாமொழி முதல் மணக்குடி வரை சாலையின் அடியில் புதிய குழாய்களைப் பதித்து தொடர் விபத்துக்கள் ஏற்படுவதை தடுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. </p>
