குமரி மாவட்ட திருக்கோவில் ஊழியர்களின் கோரிக்கைகள் அறநிலையத்துறை அமைச்சரிடம் ஆர். செல்லசுவாமி முறையீடு!
23 Jul 2026, 9:40 pm
<p><strong>குமரி மாவட்ட திருக்கோவில் ஊழியர்களின் கோரிக்கைகள் அறநிலையத்துறை அமைச்சரிடம் ஆர். செல்லசுவாமி முறையீடு!</strong></p><p>சென்னை, ஜூலை 23 - இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ். ரமேஷை, பத்மநாபபுரம் தொகுதி சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் ஆர். செல்லசுவாமி நேரில் சந்தித்தார். அப்போது, கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில் ஊழி யர்கள் சங்கத்தின் கோரிக்கைகள் தொடர்பான முறையீட்டை அளித்து, நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நேரில் வருகை தந்து, இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவில், திற்பரப்பு மகாதேவர் கோவில் உள்ளிட்ட முக்கிய திருக்கோவில் களை ஆய்வு செய்து, தேவையான வளர்ச்சிப் பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் எஸ். ரமேஷ், கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, அவற்றை நிறைவேற்ற தேவையான நடவடிக்கை களை விரைந்து மேற்கொள்வதாகத் தெரிவித்தார்.</p>
