தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குமரி மாவட்ட கோவில்களில் கட்டணக் கொள்ளை, முறைகேடுகளைத் தடுத்திடுக! விரிவான விசாரணை நடத்தி,அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திடுக!

1 Oct 2026, 9:14 pm
குமரி மாவட்ட கோவில்களில்  கட்டணக் கொள்ளை, முறைகேடுகளைத் தடுத்திடுக!  விரிவான விசாரணை நடத்தி,அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திடுக!

குமரி மாவட்ட கோவில்களில் கட்டணக் கொள்ளை, முறைகேடுகளைத் தடுத்திடுக! விரிவான விசாரணை நடத்தி,அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திடுக!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

நாகர்கோவில், அக். 1-குமரி மாவட்ட கோவில்களில்கட்டணக் கொள்ளை, முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விரிவான விசாரணை நடத்தி, உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.எஸ்.கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாகத்தில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் 490 கோவில்கள் உள்ளன. 1956ஆம் ஆண்டு மொழிவாரி மாநில மறுசீரமைப்பின்போது, திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தக் கோவில்கள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டு, அறநிலையத்துறையின் தனிப்பிரிவாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இதன் தலைமையகம் சுசீந்திரத்தில் அமைந்துள்ளது.பல நூற்றாண்டுகள் பழமையான கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், வேளிமலை குமார கோவில் போன்றவருவாய் உள்ள திருக்கோவில்கள் உள்ளன. இவற்றில் ஓரளவுக்கு ஊழியர்கள் உள்ளனர்.

சங்பரிவாரம் அராஜகம் -அதிகாரிகள் உடந்தை

ஆனால் சிறிய கோவில்களில் நிரந்தர அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் பல கோவில்களில் ஒருகால பூஜை மட்டுமே நடைபெறுகிறது. சுமார் 300 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதன் காரணமாக திருக்கோவில்களில் முறையானபராமரிப்பு மற்றும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இந்நிலையில், ‘பக்தர்கள் சங்கம்’, ‘சேவா சங்கம்’ என்றபெயரில் சங்கப் பரிவார அமைப்புகளைச் சார்ந்தவர்கள் ஆதிக்கம் செலுத்தி வருவது பக்தர்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.வழிபாடு செய்யும் பக்தர்கள் அரசால் அனுமதிக்கப்பட்ட கட்டணங்களை விட, பக்த சங்கங்கள் நிர்ணயம் செய்யும் கூடுதல் கட்டணத்தைச் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதில் அறநிலையத்துறை அதிகாரிகள், சேவா சங்கங்களுக்கு உடந்தையாகச் செயல்பட்டு வருவதாக பக்தர்கள் பலமுறை புகார் தெரிவித்தும், அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்ற கருத்து உள்ளது.

ஐம்பொன் சிலைகளுக்கு பாதுகாப்பு இல்லை

பக்தர்கள் உபயமாக வழங்கும் தங்க நகைகள், பாத்திரங்கள், விளக்குகள், வெள்ளிப் பொருட்களுக்கு ரசீது வழங்க வேண்டியஅறநிலையத்துறை கவனம் செலுத்துவதில்லை. பல கோவில்களுக்கான சாவிகள் தனிநபர்களின் கைகளில்உள்ளதாகவும், இதனால் ஐம்பொன் சிலைகள் உள்ளிட்டவற்றுக்குப் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஏற்கனவே பல கோவில்களில் திருட்டுகள் நடைபெற்று, நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.மார்த்தாண்டம் கோதேஸ்வரம் பத்திரகாளியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள மணல் மேடுகள் தனிநபர்களால் அப்புறப்படுத்தப்பட்டதும், புளியமரம் வெட்டி முறிக்கப்பட்டதுமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதுகுறித்து பெண்ஊழியர் ஒருவர் புகார் செய்ததால், அவர்வாய்மொழி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அநீதி நடைபெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தனிநபர்களின் சட்டவிரோத ஆதிக்கம்

இதுபோன்ற சிறிய கோயில்களில் தனிநபர்களின் சட்டவிரோத ஆதிக்கம், தனிச்சிறப்பு நிதி வசூல் மற்றும் கோவில் நில ஆக்கிரமிப்பு போன்றவற்றின் மீது தமிழக அரசுவிரிவான விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நேர்த்திக்கடன் பொருட்கள் வெளிச்சந்தையில் விற்பனை

குமாரபுரம் கோவிலில் உள்ள துலாபாரம் நடைமுறையில் பல முறைகேடுகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. பக்தர்கள் தங்களது எடைக்கு நிகராக நேர்த்திக் கடனாக வழங்கும் சர்க்கரை, வெல்லம், நாணயங்கள், நெல் போன்ற பொருட்கள் மின்னணு தராசுகளால் எடை போடப்படுவதில்லை என்றும், நேர்த்திப் பொருட்கள் அதிகாரப்பூர்வ கணக்கில் முழுமையாகக் காட்டாமல் வெளிச்சந்தையில் தனிநபர்களுக்கு ரகசியமாக விற்பனை செய்யப்படுவதாகவும் பக்தர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

அன்னதானத் திட்டத்தில் அரசுஒதுக்கீடு செய்யும் முழுத் தொகையும் பயன்படுத்தப்படாமல், மலிவான அல்லது தரம் குறைந்தபொருட்களைப் பயன்படுத்திவிட்டு முழுத் தொகையையும் செலவு செய்ததாகக் கணக்குகாட்டுவது, சிறிய எண்ணிக்கையில் சாப்பிட்டாலும் 100 பேர்சாப்பிட்டதாக போலிப் பதிவுகள்செய்து நிதியை கையாடல் செய்வது போன்ற குற்றச்சாட்டுகளும் பக்தர்களால் முன்வைக்கப்படுகின்றன.

சுசீந்திரம் கோவிலில் பல லட்சம் கட்டண மோசடி

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் பல லட்சம் ரூபாய் பூஜைக் கட்டண மோசடி மற்றும் கட்டுமானக்குளறுபடிகள் அரசின் தணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்களது வேண்டுதல்களுக்காக செலுத்தும் ரூ.1,500 முதல் ரூ.8,000வரை மதிப்புள்ள சிறப்புக் கால பூஜைக் கட்டணம் கணக்கில் காட்டப்படவில்லை. போலி ரசீது பயன்பாடுகள்மூலம் நிதி கையாடல் நடைபெற்றுள்ளது தணிக்கையில் தெரிய வந்துள்ளது.இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி, உடந்தையாக இருந்த உயர் அதிகாரிகள் மீதும்நடவடிக்கை எடுத்திட வேண்டும்என்ற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

குமரி மாவட்டக் கோவில்களில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகளுக்குக் காரணமான உயர் அதிகாரிகள் மீதும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கட வேண்டும். காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். ‘பக்தர்கள் சங்கம்’ என்ற பெயரில் சங்பரிவாரக் கும்பல்கள் கோவில் வளாகங்களைப் பயன்படுத்துவது, தனியார் கட்டணக் கொள்ளை போன்றவற்றைத்தடுத்து நிறுத்த வேண்டும்.இதில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.