தென்மேற்கு பருவமழை காலத்தை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திடுக!
21 May 2026, 10:45 pm

தென்மேற்கு பருவமழை காலத்தை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திடுக!

நாகர்கோவில்,மே 21- கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.அழகுமீனா, தென்மேற்கு பருவமழை காலத்தை எதிர்கொள்ள வேண்டிய முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி யுள்ளதால், பருவமழை காலத்தை எதிர்கொள்ள அனைத்துத்துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

குறிப்பாக சார் ஆட்சியர், வரு வாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர்கள் மழையினால் பாதிப்புக்குள்ளாகும் தாழ்வான இடங்களை கண்டறிந்து, அப் பகுதி பொதுமக்களை பாது காப்பாக தங்க வைப்பதற்கு ஏது வாக, நிவாரண மையங்களை தயார் நிலையில் வைத்து அதன் பொறுப்பு அலுவலர்களின் கைபேசி எண்கள் அடங்கிய விப ரங்கள் மற்றும் முதல் நிலை மீட்பு அலுவலர்களையும் தயார் நிலை யில் வைத்திருக்க வேண்டும்.

தற்காலிக தங்கும் முகாம்களில் தங்க வைக்கப்படும் நபர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் (பாய், போர்வை) இருப்பினை உறுதி செய்ய வேண்டும்.

வட்டாரம், நகர்ப்புறப் பகுதிகளில் மாற்றுத்திறனாளிக ளுக்கு, சாய்வு பாதைகள், பிரத் தேக கழிவறைகள், மின்சார வசதி, மருத்துவ உதவி உள்ளிட்ட வசதி யுடன் தங்குமிடம் அமைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக தங்க வைத்தல், மழைக்காலங்களில் இடி மின்னலினால் ஏற்படும் மனித உயிரிழப்புகள், கால்நடை சேதம் மற்றும் வீடுகள் சேதங்களை உட னுக்குடன் TNSMART இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

சேதமடையும் வீடுக ளின் பயனாளிகளுக்கு 24 மணி நேரத்திற்குள் நிவாரணம் வழங்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட விவ சாய நிலங்கள் குறித்து வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை யினருடன் இணைந்து கணக்கெ டுப்பு மேற்கொள் வேண்டும்.

வாட்ஸ்அப் குழு மூலம் அனைத்துத் துறை அலுவலர்களையும் ஒருங்கி ணைத்து பாதிப்பு குறித்த தகவல்க ளை உடனுக்குடன் பெற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் துரித நடடிவக்கை மேற்கொள்ள வேண்டும்.

முந்தைய பருவ மழைக்காலங்களில் பாதிப்புக் குள்ளான பகுதிகளில் கூடுதலாக கவனம் எடுத்து அந்த பகுதிகளில் முன்னேற்பாடு பணிகள் மேற் கொள்ள வேண்டும்.

டெங்கு போன்ற காய்ச்சல்கள் பரவா வண்ணம் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள பொதுமக்களை வலியுறுத்த வேண்டும்.

சுகாதாரமான குடிநீர் வழங்குதல் குளோரின் ஏற்றம் செய்தல், தண்ணீர் மாசுபடுதலை தடுத்தல் மற்றும் அனைத்து மேல் நிலை நீர் தேக்க தொட்டிகளையும் 15 தினங்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் அணைகளின் நீர்மட்டத்தை பராமரித்திடுக வட்டாட்சியர்கள் மற்றும் நீர் வளத்துறை செயற்பொறி யாளர்கள் பருவமழைக்காலங்க ளில் பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம்-43 அடியாகவும், பெருஞ்சாணி அணையின் நீர் மட்டம்-71 அடியாகவும் பராமரித் தல் வேண்டும்

. அணைகளில் வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகபட்சமாக வினாடிக்க 2000 கன அடி என்ற அளவிற்கு மிகாமல் பராமரித்தல் வேண்டும். வானிலை விபரத்தை மீனவர்களுக்கு தெரிவித்திடுக சேட்டிலைட் போன் (Satellite Phone) சரியான முறையில் இயங்குகின்றதா என்பதனை உறுதி செய்ய வேண்டும்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தினால் அவ்வப்போது வெளியிடப்படும் அறிவிக்கையினை முறையாக மீனவ கிராமங்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

சுற்றுலாத்துறையினர் கனமழை மற்றும் மிககனமழை என எச்சரிக்கை விடப்படும் காலங்கள் மற்றும் கடல் சீற்றம் அதிகமாக உள்ள நாட்களில் பொது மக்கள் சுற்றுலாத்தலங்களில் கூடுவதை தவிர்த்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வரும் தென்மேற்கு பருவமழையினை எதிர்கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருப்பதோடு, விடுமுறை எடுப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு ஆட்சியர் தெரி வித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வரு வாய் அலுவலர் அ.பூங்கோதை, வட்டாட்சியர்கள், தனி வட்டாட்சி யர்கள் உட்பட துறை சார்ந்த அலுவ லர்கள் பலர் கலந்து கொண்டனர்.