சர்வதேச தடகளப் போட்டியில் தங்கப்பதக்கங்களை வென்ற குமரி மாவட்ட மூத்த வீரர், வீராங்கனைகள்
23 Sept 2026, 8:21 pm

சர்வதேச தடகளப் போட்டியில் தங்கப்பதக்கங்களை வென்ற குமரி மாவட்ட மூத்த வீரர், வீராங்கனைகள்

நாகர்கோவில், செப்.23- சர்வதேச தடகளப் போட்டியில் குமரி மாவட்ட மூத்த வீரர், வீராங்கனைகள் தங்கப்பதக்கங்களை வென்று வந்துள்ளனர். சர்வதேச மூத்தோர் தடகள விளையாட்டுப் போட்டிகள் இலங்கையில் உள்ள கண்டியில் செப்டம்பர் 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

75 நாடுகளை சேர்ந்த மூத்த வீரர்களும் வீராங்கனைகளும் இப்போட்டியில் கலந்து கொண்டனர். இந்தியா சார்பாக கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து மூத்த வீரர்கள் பங்கேற்றனர். இதில் கன்னியாகுமரி மாவட்டம்சின்னத்துறை மீனவ கிராமத்தைச் சார்ந்த கெமுதா 50 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் சங்கிலி குண்டு எறிதல்போட்டியில் தங்கப் பதக்கத்தையும், குண்டெறிதல் போட்டியில் வெண்கல பதக்கத்தையும், தட்டு எறிதல்போட்டியில் வெண்கல பதக்கத்தையும் வென்றார். அதுபோன்று 75 வயதுக்கு கூடுதல் பிரிவில் செல்வராஜ்என்பவர் குண்டு எறிதல் போட்டியில்தங்கப் பதக்கத்தை வென்று வந்துள்ளார்.

முதிர்ந்த வயதில் சர்வதேச அளவில் குமரி மாவட்டத்திற்கும் தமிழகத்திற்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துவந்துள்ள தங்கதாரகை கெமுதாவிற்கும் தங்கமகன் செல்வராஜிற்கும் தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் அருட்தந்தை சர்ச்சில், கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி இயக்குநர் அருட்தந்தை பபியான்ஸ், இந்தியமூத்தோர் தடகள பெடரேஷன் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் ஜோசப், கடலோர உள்ளாட்சி தலைவர்கள்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயசுந்தரம் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்அவர்களுக்கு சால்வை மற்றும் பூமாலை அணிவித்து வரவேற்று பாராட்டுகளை தெரிவித்தனர்.

மூத்த வீரர்களை அரசு ஊக்குவித்து, செலவினங்களை ஏற்க வேண்டும்

சர்வதேச அளவில் மூத்தவர்களுக்கான தடகளப் போட்டிகளும் விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. தமிழகத்தில் முதல்வர் விளையாட்டுப் போட்டிகள் இளைஞர்களுக்கும் பள்ளிக்கூட மற்றும் கல்லூரி மாணவர்

களுக்கு நடத்தப்படுகின்றது.

எங்களைப் போன்று முதியோர் களுக்கும் இந்த போட்டி நடத்தப்பட வேண்டும். முதிர்ந்த வயதில் விளை

யாட்டுப் போட்டிகள் கலந்துகொள்வது உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு வருங்கால தலைமுறைக்கு நாங்கள்நம்பிக்கை நட்சத்திரமாகும் விளங்க முடியும். தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் மூத்தோர் இதுபோன்றுவிளையாட்டு போட்டிக்கு செல்கின்ற பொழுது அரசு எங்களை ஊக்குவித்து செலவினங்களையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று வெற்றிபெற்ற வீரர், வீராங்கனைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.