தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குமரியில் ஜூலை 17 முதல் சுய கணக்கெடுப்பு பணி துவக்கம் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து ஆட்சியர் தகவல்

8 Jul 2026, 9:18 pm
குமரியில் ஜூலை 17 முதல்   சுய கணக்கெடுப்பு பணி துவக்கம்  விழிப்புணர்வு பேரணியை  துவக்கி வைத்து ஆட்சியர் தகவல்
<p><strong>குமரியில் ஜூலை 17 முதல் சுய கணக்கெடுப்பு பணி துவக்கம் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து ஆட்சியர் தகவல்</strong></p><p>நாகர்கோவில்,ஜூலை 8- கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுயகணக்கெடுப்பு பணி நடைபெற வுள்ளதையொட்டி, நாகர்கோவில் மாநக ராட்சி சார்பில் இப்பணிகள் குறித்து பொது மக்களிடையே புரிதலை ஏற்படுத்தும் வகை யில் வடசேரி பேருந்து நிலையத்தில் விழிப்பு ணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் பேரணி ஜூலை 8 அன்று நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் கொடியசைத்து துவக்கி வைத்தார். நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஐஸ்வர்யா, உதவி ஆட்சியர் (பயிற்சி ) மோனிகா ஆகியோர் முன்னி லை வகித்தனர். இதில் ஆட்சியர் பேசுகையில், இந்தியா தனது மக்கள் தொகை கணக்கெடுப்பான “சென்சஸ் 2027“ஐ முழுவதுமாக டிஜிட்டல் முறையில் நடத்த தயாராகி வருகிறது. நாடு முழுவதும் நடத்தப்படும் இந்த சர்வே வாயி லாக மக்கள் தொகை குறித்த புள்ளி விவரங்களை முழுமையாக அறிய முடியும். இந்த சர்வேயின் முக்கிய அம்சம் சுயக்கணக்கெடுப்பாகும்.சுயகணக்கெ டுப்பு என்பது இணையதள அடிப்படையி லான முறையாகும். இதில் மக்கள்தொகை கணக்கெடுப்பாளர் உங்களின் வீட்டு வரு கைக்கு முன்பாக, மக்கள் தங்களின் விவ ரங்களை ஆன்லைனில் பூர்த்தி செய்வதே ஆகும். இதை செய்வதற்கு se.census.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று உங்களின் தனித்துவமான சுய கணக்கெ டுப்பு ID-ஐ உருவாக்க வேண்டும். இதன் மூலம் தங்கள் குடும்பத்தகவல்களை இணையம் வழியாக பதிவு செய்யலாம். தமிழ் ஆங்கிலம் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெ டுத்து அதில் உள்ள விண்ணப்பத்தை நிரப்ப லாம். இது உங்கள் வீட்டுக்கு கணக்கெ டுப்பாளர் வரும்போது நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜூலை 17 ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கணக்கெடுப்பு படிவத்தில் 33 கேள்விகள் இடம்பெற்றி ருக்கும். தனிநபரை பாதிக்கக் கூடிய எந்த வொரு தகலும் இடம்பெறாது. அவ்வாறு இடம்பெறும் எனில் இரகசியமாக வைக் கப்படும். இக்கணக்கெடுப்பு பணியில் மாவ ட்டத்திற்குட்பட்ட பள்ளி ஆசிரியர்கள், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சி கள் மற்றும் ஊராட்சிகளில் பணிபுரி யும் பணியாளர்கள் உள்ளிட்டோர் இடம் பெறுவர். ஒரு கணக்கெடுப்பாளருக்கு 200 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஒவ்வொரு நாளும் குறைந்த பட்சம் 20 நபர்களை சந்தித்து, தகவல்க ளை பதிவு செய்ய வேண்டும். 6 கணக்கெ டுப்பாளர்களுக்கு ஒரு மேற்பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே இப்பணி யில் ஈடுபடவுள்ள பணியாளர்கள் முழு ஈடு பாட்டுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் தங்களை தேடி வரும் கணக்கெடுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, உங்கள் விவரங்களை முழுமையாக பதிவு செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இப் பேரணியில் மாநகராட்சி அலவ லர்கள், நாகர்கோவில் பெண்கள் மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர் கள், தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். </p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.