நவ.17: சபரிமலை பக்தர்கள் வருகையால் கன்னியாகுமரியில் சீசன் தொடங்குகிறது
2 Nov 2026, 10:32 pm

நவ.17: சபரிமலை பக்தர்கள் வருகையால் கன்னியாகுமரியில் சீசன் தொடங்குகிறது

நாகர்கோவில், நவ. 2 -புகழ் பெற்ற சர்வதேச சுற்றுலா தலமானகன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். கன்னியாகுமரிக்குவருடம்முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3மாதங்களும்கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி அய்யப்ப க்தர்களின் வருகையும் அதிக அளவில்காணப்படும். இதனால் இந்த 3 மாதங்களும் இங்கு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் காலமாக கருதப்படுகிறது.குறிப்பாக டிசம்பர் மாதம் மண்டல பூஜையையொட்டி அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகளவில் இருக்கும். மேலும்டிசம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதாலும் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டுகொண்டாட்டத்தை யொட்டியும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவில் காணப்படும்.

இது தவிர ஜனவரி மாதம், பொங்கல் பண்டிகை மற்றும் மகர விளக்கு தரிசனத்தை யொட்டியும் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதும். எனவே இந்த 3 மாத காலமும் கன்னியாகுமரியில் சீசன் களை கட்டும்.கன்னியாகுமரியில் இந்த ஆண்டு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் நவ.17ஆம் தேதி தொடங்குகிறது. இந்த சீசன்ஜனவரி 20 ஆம் தேதி வரை 65 நாட்கள் நீடிக்கும். இந்த சீசனையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள்மற்றும் அய்யப்ப பக்தர்களுக்கு நகராட்சிநிர்வாகம் சார்பில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்ட உள்ளன.

குடிநீர், கழிப்பறை, மின்விளக்கு மற்றும் சுகாதார வசதிகளை நிர்வாகம் செய்து கொடுக்க கன்னியாகுமரி நகர்மன்ற நிர்வாகம் முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. சீசனையொட்டி, துப்புரவு பணியாளர்கள் சுழற்சி முறையில் துப்புரவு பணியில் ஈடுபடுவார்கள். ஆண்டுதோறும் சபரிமலை சீசனையொட்டி கன்னியாகுமரியில் நடை பாதைகளில் சீசன்கடைகள் தனியாருக்கு ஏலம் விடப்படுவது வழக்கம். அந்த அடிப்படையில் இந்த சீசன் கடைகள், நகராட்சி நிர்வாக மின்னஞ்சல் சேவை மூலம் ஏலம் விடப்படுகிறது. சபரிமலை அய்யப்ப சீசன் தொடங்குவதற்கு இன்னும் 25 நாட்களே உள்ளன. கன்னியாகுமரியில் சீசன் கடைகள், கார் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் உரிமை, கட்டண கழிப்பறைபோன்றவற்றை ஏலம் விட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கான ஏலம் விரைவில்நடக்கிறது.

இதற்கிடையில் சீசனையொட்டி 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட உள்ளனர்.இவர்கள் சிப்ட் முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். மேலும் கடற்கரை பகுதிகளில் கூடுதல்கண்காணிப்பு கேமராக்கள் வசதி செய்யப்பட உள்ளன. பாதுகாப்பு பணியில் போலீசார், ஊர்க்காவல் படையினர் மற்றும் போக்குவரத்து போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களை நிறுத்துவதற்கு தனி பார்க்கிங் வசதி ஏற்பாடும் செய்யப்படஉள்ளது. சபரிமலை சீசனையொட்டி நவ.17ஆம் தேதி முதல் கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு நடை திறக்கும் நேரம் கூடுதலாக 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மதியம் 12.30 மணிக்கு அடைக்கப்படும்நடை ஒரு மணிக்கும், இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படும் நடை இரவு 9 மணிக்கும் அடைக்கப்படும்.சீசனையொட்டி சுற்றுலா பயணிகளை வரவேற்க கன்னியாகுமரி நகரம் தயாராகிக் கொண்டிருக்கிறது.