ரூ. 16 லட்சம் மட்டுமே ஒதுக்கீடு!
yesterday
<p><strong>ரூ. 16 லட்சம் மட்டுமே ஒதுக்கீடு!</strong></p><p>சட்டமன்ற உறுப்பினர் ஆர். செல்லசுவாமி பேசுகையில், “தேசிய நெடுஞ்சாலைகளின் நிலை மட்டுமின்றி, பத்மநாபபுரம் தொகுதியில் உள்ள குலசேகரம் – மார்த்தாண்டம், தக்கலை – குலசேகரம் உள்ளிட்ட சாலைகளை சீரமைக்க சட்டப்பேரவையில் வலியுறுத்தியும் வெறும் ரூ. 16 லட்சம் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது” என்றார். </p><p>மாவட்டச் செயலாளர் என்.எஸ். கண்ணன் பேசுகையில், “துவாரகா விரைவுச் சாலைக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ‘ரூ. 250 கோடி செலவு’ என ‘கணக்கு’ காட்டியிருக்கும் ஒன்றிய அரசு, கன்னியாகுமரி மாவட்டச் சாலைகளைச் சீரமைக்க ஒரு கிலோ மீட்டருக்கு குறைந்தபட்சம் ரூ.1 கோடியாவது ஒதுக்கி, பணிகளை முடித்து மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்” என்றார். நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஏ.வி. பெல்லார்மின் பேசுகையில், “சாலைகளில் ஏற்படும் விபத்துகளுக்கு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளைப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும்” என்றார்.</p>
