காவல்துறையின் சிறப்பு மக்கள் குறைதீர் கூட்டம்
24 Jun 2026, 9:39 pm
<p><strong>காவல்துறையின் சிறப்பு மக்கள் குறைதீர் கூட்டம்</strong> </p><p>நாகர்கோவில், ஜூன் 24- தமிழக போலீஸ் டிஜிபி விடுத்த உத்தரவை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின் பொதுமக்கள் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதற்காக அனைத்து புதன் மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் மனு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவுபடி ஜூன் 24 ஆம் தேதி கன்னியா குமரி மாவட்டத்தில் மாவட்ட அலுவலகம், உட்கோட்ட அலுவலகங்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் இந்த மனு விசாரணை நடைபெற்றது. பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீதான நடவ டிக்கையை தீவிரப்படுத்த மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.</p>
