தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருநெல்வேலி விரைவு செய்திகள்

5 Oct 2026, 9:33 pm
திருநெல்வேலி  விரைவு செய்திகள்

மாற்றுத் திறனாளிகள் நல விருதுகளுக்கு அக்.22-க்குள் விண்ணப்பிக்கலாம்

நாகர்கோவில், அக். 5 -கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவையாற்றியவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மாநில அளவிலான விருதுகள் வழங்கப்பட உள்ளன. உலக மாற்றுத் திறனாளிகள் தினமான டிசம்பர் 3 ஆம் தேதி தமிழக முதலமைச்சரால் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

சிறந்த பணியாளர், சுயதொழில் புரிபவர் உள்ளிட்ட 10 பிரிவுகளில் தலா ஒரு விருதும், சிறந்த ஆசிரியர், சமூகப் பணியாளர், தொண்டு நிறுவனம், மாற்றுத் திறனாளிகளை அதிகளவில் பணியமர்த்திய நிறுவனம் உள்ளிட்ட பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்படுகின்றன. சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநர், நடத்துநர் மற்றும் தடையற்ற கட்டமைப்புகளை ஏற்படுத்திய அரசு, தனியார் நிறுவனங்களுக்கு தலா 2 விருதுகள் வழங்கப்படும். ஒவ்வொரு விருதுக்கும் 10 கிராம் தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

விருதுகளுக்கு விண்ணப்பிப்போர் உரிய இணைய தளத்தில் அக்.22 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தின் இரண்டு நகல்களையும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

யூடியூபர் மதுமிதா மீது திருட்டு வழக்கு

நாகர்கோவில், அக். 5 -கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே தம்மத்துக்கோணத்தில் வசிக்கும் யூடியூபர் மதுமிதா (32) மீது, 5 சவரன் நகை பறித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ராஜாக்கமங்கலம் போலீசார் திருட்டு வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

புகாரின்படி, திருநெல்வேலியில் உள்ள ஸ்பாவில் பணியாற்றிய போது அறிமுகமான 89 வயது தொழிலதிபரை காரில் அழைத்து மசாஜ் செய்தபோது, அவரது கழுத்தில் இருந்த 5 சவரன் நகையை பறித்ததாகவும், இதுகுறித்து வெளியே தெரிவித்தால் அவமானப்படுத்துவதாக மிரட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது. அப்போது புகார் அளிக்காத தொழிலதிபர், தற்போது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனிடையே, மதுமிதா வீட்டில் கடந்த செப்.24 ஆம்தேதி 118 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளைய

டிக்கப்பட்டதாகவும், இச்சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குளச்சல் காவல் நிலையத்தில் மதுமிதா அளித்துள்ள புகாரில், கண்டன்விளையில் கிறிஸ்தவ ஆலய திருவிழா காட்சிகளைப் பதிவு செய்துவிட்டு இரவில் தோழிகளுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்ததாகவும், குளச்சல் மீன்பிடித் துறைமுகம் அருகே உள்ள டீக்கடையில் டீ குடித்த போது, அங்கிருந்த சில இளைஞர்கள் அவரிடம் ஆபாச செய்கை

காட்டி அநாகரீகமாக பேசியதாகவும் இதைக் கண்டித்து

விட்டு புறப்பட்ட அவரை, இளைஞர்கள் பின்தொடர்ந்து சென்று ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர் அளித்த புகாரின் பேரில், அடையாளம் தெரியாத 15 பேர் குறித்து குளச்சல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து அவர் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவர் எண்ணிக்கையை குறைப்பதை கைவிடுக: சிபிஎம்

நாகர்கோவில், அக். 5 -தக்கலையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் மருத்துவர் எண்ணிக்கையை 21 ஆக குறைக்கும் நடவடிக்கையை கைவிடுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து சிபிஎம் குமரி மாவட்ட செயலாளர்என்.எஸ்.கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கன்னியாகுமரி மாவட்டத்தின் அரசு தலைமை மருத்துவமனையாக தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையை நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் பயன்படுத்தி வருகின்றனர். இம்மக்களுக்கு உரிய முறையில் மருத்துவம் செய்திட கூடுதல்மருத்துவர்கள் தேவை என்ற நிலை உள்ளது.

இந்நிலையில் சுகாதாரத் துறை மற்றும் குடும்பநலத் துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையில் தக்கலை அரசு மாவட்டதலைமை மருத்துவமனையின் மருத்துவர் எண்ணிக்கையை 35 லிருந்து 21ஆக குறைப்பதாக அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் சென்று மருத்துவ வசதியை பெற்றிடஇயலாத எளிய மக்கள் தரமான, இலவச மருத்துவ வசதி பெறுவதற்காக அரசு மருத்துவமனையை நாடி வருகின்றனர்.நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில்போதுமான எண்ணிக்கையில் மருத்துவர்கள் இல்லாமல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக நோயாளிகள் கருதுகின்றனர். இந்நிலையில் மருத்துவர்கள் எண்ணிக்கையை குறைப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகும்.

எனவே, அரசு எடுத்துள்ள மருத்துவர் எண்ணிக்கையை குறைக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும். மேலும்தலைமை மருத்துவமனை என்ற அந்தஸ்தில் செயல்பட்டு வரும் இம்மருத்துவ மனையில் படுக்கைகளின் எண்ணிக்கையை 300 ஆக உயர்த்திட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துவதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளகுமரி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

நாகர்கோவில், அக்.5 -கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், எல்நினோ உள்ளிட்ட காலநிலை மாறுபாடுகளின் தாக்கத்தையும் கருத்தில் கொண்டு பொதுமக்கள், விவசாயிகள், மீனவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வெளி

யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பருவமழையின்போது கனமழை, பலத்தகாற்று, திடீர் வெள்ளப்பெருக்கு, மண் சரிவு, மரங்கள்மற்றும் மின்கம்பிகள் விழுதல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்க வேண்டும். கனமழை நேரத்தில் தேவை

யற்ற பயணங்களை தவிர்ப்பதுடன், நீர்வீழ்ச்சிகள், ஆறுகள், ஓடைகள் மற்றும்வெள்ள அபாய பகுதிகளுக்குச் செல்லக்கூடாது. மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

விவசாயிகள் வயல்களில் நீர் தேங்காதவாறு வடிகால் வசதிகளை ஏற்படுத்தவும், அறுவடைக்கு தயாரான பயிர்களை பாதுகாப்பாக சேமிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வாழை, தென்னை உள்ளிட்ட காற்றால் பாதிக்கக்கூடிய பயிர்களுக்கு உரியபாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பலத்த காற்று, கடல்சீற்றம் உள்ளிட்ட எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டால் மீனவர்கள் கடலுக்குச் செல்லக்கூடாது. படகுகள், வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற வேண்டும்.

வடகிழக்கு பருவமழை மற்றும் எல்நினோ உள்ளிட்ட காலநிலை மாறுபாடுகளை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனைத்து துறைகளுடன் ஒருங்கிணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாவட்ட பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை, அனைத்துத்துறை பணியாளர்களுடன் 24மணி நேரமும் செயல்பட்டுவருகிறது. பேரிடர் தொடர்பான அவசர உதவிகளுக்கு 1077, 04652-231077 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.