திருநெல்வேலி விரைவு செய்திகள்
20 Aug 2026, 10:10 pm

திருநெல்வேலி விரைவு செய்திகள்

அடகு கடையில் போலி நகைகளை வைத்து ரூ.13.16 லட்சம் மோசடி

நாகர்கோவில், ஆக. 20-குமரி மாவட்டம், நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம் குடப்பள்ளி பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் (52) என்பவர் நித்திரவிளையில் நகை அடகு கடை நடத்தி வருகிறார்.இவரது கடையில் குருசடி வளாகத்தைச் சேர்ந்த பியலின் (35) நகை மதிப்பீட்டாளராகவும், கலிங்கராஜபுரம்அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சோனு (25) காசாளராகவும் பணியாற்றி வந்தனர்.இந்நிலையில், இருவரும் கடந்த ஆண்டு பல்வேறு பெயர்களில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.13 லட்சத்து 16 ஆயிரம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடை உரிமையாளர் பால்ராஜ் நித்திரவிளை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில்பியலின், சோனு ஆகிய இருவர் மீதும் போலீசார்வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொது விநியோகத் திட்ட குழுவில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர்

நாகர்கோவில், ஆக. 20-தமிழ்நாடு உணவுப்பாதுகாப்பு விதிகளின்படி பொது விநியோகத் திட்டம் சீரான முறையில் நடைபெறுவதைஉறுதி செய்திடவும், பொது விநியோகத்திட்டத்தின் பயன்கள் உரியவர்களை சென்றடைவதை உறுதி செய்திடவும்மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு அமைத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்டஅளவில் செயல்பட்டு வந்த கண்காணிப்பு குழுவின் பதவிக்காலம் 30.10.2025 தேதியில் முடிவடைந்துவிட்டதால்புதிய குழுவினை தேர்ந்தெடுக்கும் பொருட்டு தகுதியானநபர்கள் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.இக்குழுவில் அலுவல் சார்ந்த உறுப்பினர்கள் தவிர 5 உறுப்பினர்கள் இடம்பெறுவர். இதில் பெண்கள், நுகர்வோர்அமைப்புகள், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கூட்டுறவு இயக்கங்களில்ஈடுபாடு கொண்ட நபர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் வகையில் மேற்படி தலா 1 நபர் வீதம் 5உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நியமனம் செய்யப்படும் உறுப்பினர்களின் பதவிக்காலம் நியமனம்செய்யப்படும் நாளிலிருந்து 2 ஆண்டுகள் ஆகும். இக்கண்காணிப்புக் குழுவில் உறுப்பினராக விருப்பமுள்ளவர்கள் தன் சுயவிபரங்களுடன் 05.09.2026-க்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்டவழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரிடம் நேரிடையாகவோ அல்லது தபால் மூலமாகவோவிண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

களியக்காவிளை அருகே கடன் தொல்லையால் இளைஞர் தற்கொலை

குழித்துறை, ஆக. 20-குமரி மாவட்டம், களியக்காவிளை அருகே மடிச்சல்பகுதியைச் சேர்ந்தவர் தாணுலிங்கம் மகன் சஜித் (36).வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் இரு மாதங்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்தார். இவருக்கு மனைவியும், 4 வயதில் குழந்தைகளும் உள்ளனர். கடன் பிரச்சனையால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் பால் வாங்கச் சென்ற அவரது தாயார் வீடு திரும்பிய போது மகன் தூக்கில் தொங்கி நிலையில்இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதியினர் களியக்காவிளை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீஸார் வந்து, உடலை மீட்டுகுழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாம்பழம் பறிக்க முயன்று மாடியில் இருந்து தவறி விழுந்தவர் மரணம்

தக்கலை, ஆக .20-குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கீழ மூலச்சல் பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் ( 66 ). இவரதுநண்பர் சியாம் ராஜா வீட்டில் மாமரம் உள்ளது. சம்பவத்தன்று அங்கு சென்ற சார்லஸ் மாடியில் உள்ள சன்சைடில்ஏறி மாம்பழம் பறிக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தார். பலத்தகாயமடைந்த சார்லசை உடனடியாக அப்பகுதியினர் தக்கலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர்அங்கிருந்து நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கிருந்துமேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் வியாழக்கிழமை காலையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இது குறித்து அவரதுமகன் முருகேசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓய்வுபெற்ற காவல் அதிகாரியை கத்தியால் வெட்டியவர் மீது வழக்கு

குழித்துறை, ஆக.20-முன்விரோதத்தால் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் தாக்கப்பட்டார் .இது தொடர்பாக வாலிபர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.குமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே கரவிளாகத்தைச் சேர்ந்தtர் பாலகிருஷ்ணன் (வயது 74).இவர் சிறப்பு காவல் ஆய்வாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்ஆவார். இவருக்கும் இடவிளாகத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் பினோ பெர்லின் என்பவருக்கும் இடையேமுன்விரோதம் இருந்து வந்துள்ளது.சம்பவத்தன்று பினோ பெர்லின் காரில் வந்து மட்டுப் பாவு ஜங்ஷனில் வைத்து பாலகிருஷ்ணனை தகாதவார்த்தையால் திட்டி தாக்கி கத்தியால் வெட்டி இரத்தகாயம் ஏற்படுத்தி உள்ளார் .இதுகுறித்து பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் பினோபெர்லின் மீதுமார்த்தாண்டம்போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மின்வாரிய முறைகேடுகள் குமரியில் ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் அதிரடி சோதனை

நாகர்கோவில், ஆக. 20-கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்வாரியத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்அதிரடி சோதனை நடத்தினர்.தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற சோதனையின் ஒரு பகுதியாக, நாகர்கோவில் வடசேரியைச்சேர்ந்த மின் பொருட்கள் சப்ளைஒப்பந்ததாரர் குமாரசாமி வீட்டில் காலை 10 மணியளவில் சோதனை நடைபெற்றது.மின் பொருள் விநியோகம் தொடர்பான ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதேபோல் புதுக்கடையிலும் மற்றொரு ஒப்பந்ததாரர் வீட்டில் சோதனை நடைபெற்றது. குமரியில் 2இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்றது.