தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

​​​​​​​திருநெல்வேலி விரைவு செய்திகள்

9 Jul 2026, 9:30 pm
​​​​​​​திருநெல்வேலி  விரைவு செய்திகள்

வாகனங்களில் கடத்தப்பட்ட ரேசன் அரிசி-மண்ணெண்ணெய் பறிமுதல்

குழித்துறை,ஜூலை 9- கன்னியாகுமரி மாவட்டம் மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் பாரதி தலைமையில் பறக்கும் படை குழுவினர் அகஸ்தீஸ்வரம் வட்டம் பகுதியில் இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். செம்பன் கரை என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த பயணிகள் ஆட்டோவை நிறுத்துமாறு கை காட்டினர். ஆனால் நிற்காமல் சென்ற ஆட்டோ வை மடக்கி பிடித்தனர் .ஓட்டுனர் தப்பி ஓடினார். ஆட்டோவை சோதனை செய்த போது பொது வினியோக திட்ட அரிசி கேரளா மாநிலத்திற்கு கடத்தி செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அதில் 554 கிலோ பொது வினியோக திட்ட அரிசி இருந்தது. கைப்பற்றப்பட்ட அரிசி கோணம் கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது. அன்று இரவு 11 மணியளவில் கிள்ளியூர் வட்டம் ரோந்து பணியில் இருந்த போது கெலன் நகர் என்ற இடத்தில் ஒரு மறைவான பகுதில் சுமார் 500 கிலோ அரிசி மறைத்து வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதே போல் கிள்ளியூர் வட்டம் இனயம் என்ற இடத்தில் ஒரு பஞ்சாயத்து கிணற்று பக்கம் சுமார் 600 கிலோ அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நடுத்துறை என்ற இடத்தில் பாழடைந்த விட்டு வீட்டின் சுமார் 1500 கிலோ அரிசி மற்றும் மீனவர்களுக்கு மானிய விலையில் அரசால் வழங்கப்படும் வெள்ளை நிற மண்ணெண்ணெய் சுமார் 1700 லிட்டர் கேரளா மாநிலத்திற்கு கடத்தி செல்ல இருந்தது கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து ரேசன் மண்ணெண்ணெய் 140 லிட்டர் நடுத்துறை என்ற இடத்தில் புல் தரையில் மூடி போட்டது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்ற பட்டது . கைப்பற்ற பட்ட அரிசியை காப்புக்காடு அரசு கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது.மேலும் வெள்ளை நிற மண்ணெண்ணெய் தூத்தூர் மண்ணெண்ணெய் கிடங்கிலும் ஒப்படைக்கப்பட்டது.

நாளை குமரியில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் கூட்டம்

நாகர்கோவில், ஜூலை 9- குமரி மாவட்ட பொது விநியோகத் திட்ட செயல்பாட்டில் காணப்படும் குறைபாடுகளை களையவும், மக்களின் குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும், சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் 11.07.2026 (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது. இம்முகாம்களில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், இறந்த குடும்பத் தலைவர்களின் பெயர் மற்றும் புகைப்பட மாற்றம், குடும்ப அட்டையில் பெண் குடும்பத் தலைவரின் புகைப்படம் மாற்றம், நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்கள், கைபேசி எண் பதிவு மற்றும் மாற்றம் தொடர்பான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களும் பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, பொதுமக்கள் இந்த சிறப்பு மக்கள் குறைதீர் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜூலை 25 நாகர்கோவிலில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

நாகர்கோவில்,ஜூலை 9- கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகர்கோவில் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புர வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் 25-07-2026 சனிக்கிழமை அன்று நாகர்கோ வில் பயோனியர் குமாரசுவாமி கல்லூரியில் நடத்தப்பட வுள்ளது. இம்முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8 ஆம் வகுப்பு, 10 ஆம் குப்பு, 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப் படிப்பு, செவிலியர் படிப்பு போன்ற கல்வித்தகுதி உடைய வேலைநாடுநர்கள் அனைவரும் கலந்து கொள்ள லாம். இம்முகாமில் பங்கேற்க விரும்பும் தனியார் நிறுவ னங்கள் தங்களது பணிக்காலியிடங்கள் தொடர்பான விவரங்களை jobfairdeonagercoil@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுகொள்ளப் படுகிறீர்கள். தகுதியான நிறுவனங்களுக்கு மட்டுமே CONFIRMATION MAIL அனுப்பப்படும். Confirmation Mail பெறப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளமுடியும் எனவும், இவ்வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாளன்று பதிவு செய்யாமல் வரும் வேலையளிக்கும் நிறுவனங்கள் இந்த முகாமில் கலந்து கொள்ள இயலாது என்ற விவரமும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்கள் நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய சமூகவலைதளமான TELEGRAM CHANNEL ல் EMPLOYMENT OFFICE NAGERCOIL என்ற குழுவில் தங்களை இணைத்து கொள்ளுமாறும் மற்றும் “தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் TamilNadu Private Job Portal” (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதளத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளு மாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எனவே, இச்சேவையை பொதுமக்களும், நிறுவனங்களும் பயன்படுத்தி இந்த மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் மு. பிரதாப் தெரிவித்துள்ளார்.

அருமனை சுற்று வட்டாரத்தில் உரிமமின்றி செயல்படும் பன்றிப்பண்ணைகளை மூட வேண்டும் ஆய்வு மேற்கொண்டு சார் ஆட்சியர் உத்தரவு

அருமனை, ஜூலை 9- கன்னியாகுமரி மாவட்டம் அருமனை சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான பன்றி பண்ணைகள் உள்ளன. இந்த பன்றி பண்ணைகளுக்கு கோழிக்கழிவுகளையும் மற்றும் இறைச்சி கழிவுகளையும் அழுகிய நிலையில் வாகனம் மூலம் கொண்டு செல்வதால் துர்நாற்றம் வீசி சுகாதாரம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் மாவட்ட நிர்வா கத்திற்கு புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து செவ்வாய்க் கிழமையன்று சார் ஆட்சியர் (பொறுப்பு) புஷ்பா தேவி தலைமையிலான அதிகாரிகள் டிஎஸ்பி நல்லசிவம் ஆகியோர் பன்றிப்பண்ணைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் மாலையில் அருமனை சந்திப்பில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் அனைத்து பன்றி பண்ணை உரிமையாளர்களையும் வரவ ழைத்து விசாரித்தனர். அப்போது அவர்களின் உரிமங்களை ஆய்வு செய்தபோது 11 பன்றி பண்ணைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதில் இரண்டு பண்ணைக ளுக்கு மட்டுமே உரிமம் இருப்பதாக தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மற்ற பன்றி பண்ணைகள் அங்கீகாரம் இன்றி சுற்றுப்புற சுகாதாரச் சீர்கேட்டுடன் செயல்பட்டு வருவதையும் கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அனுமதி இல்லாமல் செயல்படுகின்ற பன்றி பண்ணைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று சார் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.