திருச்சி விரைவு செய்திகள்
7 May 2026, 9:05 pm

வாக்களிக்க ஊருக்கு வந்த தொழிலாளியை காணவில்லை தந்தை புகார்-காவல்துறை விசாரணை

அருமனை, மே 7- கன்னியாகுமரி மாவட்டம் பனச்சமூடு அருகே குளப்பாறை பகுதியை சேர்ந்தவர் செரியான் மகன் வினித் (31). இவர் கன்னியாகுமரியில் உள்ள வலை கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். இவர் மாதத்தில் ஒருமுறை குளப்பாறையில் உள்ள தனது வீட்டிற்குச் செல்வது வழக்கம். இந்நிலையில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கு வாக்களிப்பதற்காக குளப்பாறைக்கு வந்ததாகவும் பின்னர் வீட்டிற்கு செல்ல வில்லை எனவும் தெரிகிறது. இதனால் பதறிப்போன செரியான், மகன் வேலை செய்து வந்த கம்பெனியை தொடர்பு கொண்டு கேட்டபோது அங்கு வினித் செல்லவில்லை என கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து செரியன் பல இடங்களிலும் தேடினார். எந்தவித தகவலும் இல்லாததால் இதுகுறித்து செரியான் அருமனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அருமனை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வினித்தை தேடி வருகின்றனர்.

திருவனந்தபுரம் -வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

நாகர்கோவில், மே.7- கோடை விடுமுறையை ஒட்டி திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மே 13, 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் திருவனந்த புரம் வடக்கு ரயில் நிலையத்தில் இருந்து காலை 11 மணிக்கு வேளாங்கண்ணிக்கு புறப்படும். மறுமார்க்கமாக மே 14, 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பகல் 12.45 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்படும்.

பீர்பாட்டிலை வீசி அரசுப் பேருந்தின் கண்ணாடி உடைப்பு

நாகர்கோவில்,மே 7- குமரி மாவட்டத்தில் பீர் பாட்டில் வீசி பேருந்து கண்ணாடியை உடைத்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திரன். இவர் நாகர்கோவிலில் இருந்து குமரி நோக்கி அரசுப் பேருந்தை ஓட்டிச் சென்றார். கொட்டாரம் பகுதியில் அவர் சென்று கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் பீர் பாட்டிலை பேருந்து கண்ணாடி மீது வீசினர். இதில் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இதுகுறித்து ரவீந்திரன் கொடுத்த புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கனரக லாரிகள் பறிமுதல் 9 பேர் மீது வழக்கு

நாகர்கோவில், மே 7- உரிய அனுமதியின்றி தடையை மீறி கேரளாவுக்கு செல்ல முயன்ற 9 கனிமவள கனரக லாரிகள் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மே 7ஆம் தேதி நடந்த வாகனச் சோதனையில் புதுக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது தடையை மீறி கேரளாவுக்கு செல்ல முயன்ற ஏழு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் காளியக்கவிளை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் நடத்திய வாகனச் சோதனை யில் இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வாகன சோதனையானது மேலும் தீவிரப் படுத்தப்படும் என்றும் தடையை மீறும் கனரக வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மருத்துவமனையில் குழந்தையிடம் தங்க நகையை திருடிய பாதுகாவலர் கைது

நாகர்கோவில், மே 7- குமரி மாவட்டம், குருந்தன்கோடு அருகே உள்ள கட்டிமாங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஹர்சன் தாஸ். இவரது மனைவி டெல்பின் அமலா(24). இவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத் துவமனைவில்ய டிப்ளமோ நர்சிங் படித்துள்ளார். டிப் ளமோ தேர்வின்போது மதிப்பெண் குறைவாக கிடைத்ததாக தெரிகிறது. இதனால் தனது தேர்வு தாளை மறு திருத்தம் செய்ய டெல்பின் அமலா முடிவு செய்தார். அதற்கான கடந்த 5 ஆம் தேதி தேர்வு மறுதிருத்தம் செய்ய வேண்டி பணம் கட்ட டெல்பின் அமலா தனது கைக்குழந்தையுடன் ஆசா ரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தார். பின்னர் கழிப்பறைக்கு செல்வதற்காக அமலா தனது குழந்தையை அங்கு மகளிர் பாதுகாவலரான கோட் டார் சாஸ்தான்குளக்கரை பகுதியை சேர்ந்த மீரா (30) என்பவரிடம் கொடுத்துவிட்டு சென்றார். பின்னர் வந்து குழந்தையை பெற்றுச்சென்றார். டெல்பின் அமலா வீட்டிற்கு வந்து, குழந்தையின் இடுப்பு பகுதியை பார்த்தபோது இடுப்பில் கிடந்த 8 கிராம் தங்க அரைஞாண்கொடியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த டெல்பின் மருத்துவமனையில் பணி யாற்றி வரும் பெண்தான் அரைஞாண் கொடியை திருடிஇருப்பார் என் சந்தேகம் அடைந்தார். பள்ளம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மீராவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பழவிளையில் மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி : 7 பேர் மீது வழக்கு

நாகர்கோவில்,மே 7- குமரி மாவட்டம், பழவிளை மின்வாரி யம் சார்பில் மின்கம்பங்கள் நடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக மின் வயரில் கம்பம் உரசியதில் மின்சாரம் தாக்கி முத்து பாலன் (22) என்ற ஒப்பந்த பணியாளர் உயிரிழந்தார். இது குறித்து ராஜாக்க மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, மின்வாரிய பணியாளர்கள் உட்பட 7 பேர் மீது விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாவட்டங்களில் பாதுகாப்பு திடீர் அதிகரிப்பு

திருநெல்வேலி/நாகர்கோவில், மே 7- தமிழகத்தில் நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தவெக தலைவர் தமிழக முதல்வராக பொறுப்பேற்பதற்கு பெரும்பான்மை வேண்டும். இதன் காரணமாக வியாழக்கிழ மை அவர் பதவி ஏற்கவில்லை. இது ஓரிரு நாட்கள் தள்ளி போகலாம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் வேறு எந்தவிதமான அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு முன்னெச்ச ரிக்கையாக முக்கியமான பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து நெல்லை மாவட்டம் மற்றும் மாநகரத்திலுள்ள தலைவர்களின் சிலைகள், மார்க்கெட்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் உட்பட பல்வேறு முக்கியமான பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் எஸ்பி பிரசன்னகுமார் தலைமையில் ஆயிரம் போலீசாரும், நெல்லை மாநகரத்தில் காவல் ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய் தலைமையில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் குறிப்பாக நெல்லை வண்ணார்பேட்டை ரவுண்டானாவில் போலீசார் குவிக் கப்பட்டுள்ளனர். நாகர்கோவில் நாகர்கோவில் தம்மத்துக்கோணம் பகுதியில் உள்ள தாரகை கத்பர்ட்டின் இல்லத்திற்கு திடீரென போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள தலைவர்கள் சிலை களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கருங்கல் பகுதியில் உள்ள ராஜேஷ்குமார் எம்எல்ஏ ,விளவங்கோடு எம்எல்ஏ பிரவின் ஆகியோர் வீடுகளிலும் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மே 13 இல் வாகனங்கள் பொது ஏலம்

தென்காசி, மே 7- தென்காசி மாவட்டத்தில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 203 மோட்டார் வாகனங்களுக்கான பொது ஏல அறிவிப்பை மாவட்ட எஸ்.பி.மயில் வாகனன் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது: தென்காசி மாவட்டம், புளியங்குடி உட்கோட்ட காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 197 இருசக்கர வாகனங்களும், 3 மூன்று சக்கர வாகனங்களும் 2 நான்கு சக்கர வாகனங்களும் மற்றும் மதுவிலக்கு குற்றவழக்கில் தொடர்புடைய 1 இருசக்கர வாகனம் என மொத்தம் மொத்தம் 203 மோட்டார் வாகனங்கள் பொது ஏலம் வரும் 13.05.2026 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை சொக்கம்பட்டி காவல்நிலைய வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொண்டு வாகனங்களை ஏலம் எடுக்க விரும்பும் நபர்கள் மேற்படி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 09.05.2026 ஆம் தேதி முதல் 12.05.2026 ஆம் தேதி வரையிலான 4 நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை பார்வையிடலாம். மேலும் தங்களின் பெயர், முகவரி அடங்கிய ஆதார் அட்டையுடன் ரூ.3000 முன்பணம் நேரில் செலுத்தி பதிவு செய்து டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும். டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும். வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலம் எடுத்த நாளிலேயே ஏலத்தெகையை ரொக்கமாக உடனடியாக செலுத்தி வாகனத்தை எடுத்துச் செல்ல வேண்டும். மேலும் விபரங்களுக்கு 9488488933, 9629919033, 9498140002 என்ற கைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் தட்டுப்பாடால் ரப்பர் விலை உயர்வு

நாகர்கோவில், மே 7- சர்வதேச சந்தையில் தட்டுப்பாட்டால் ரப்பர் விலை கிலோ ஒன்றுக்கு 300 ரூபாயை நோக்கி அதிரடியாக உயர்ந்து வருகிறது. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலிப்பதால் ரப்பர் விலை 250 ரூபாயைக் கடந்து முன்னேறிச் செல்கிறது. ரப்பர் உற்பத்தி நாடுகளான தாய்லாந்து மற்றும் மலே சியாவில் உற்பத்தி பெருமளவு குறைந்துள்ளதே இந்த விலை ஏற்றத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள ரப்பர் தட்டுப்பாடு மற் றும் கச்சா எண்ணெய் விலையில் நிலவும் நிலையற்ற தன்மை ஆகியவை விலையை மேலும் உயர்த்தியுள்ளன. பாங்காக் சந்தை யில் ஆர்.எஸ்.எஸ்-4 தர ரப்பரின் விலை கிலோவுக்கு 279 ரூபாயாக உயர்ந்தது. இதன் எதிரொ லியாக. கேரளாவின் கோட்டயம் மற்றும் கொச்சி சந்தைகளில் ஆர்.எஸ்.எஸ்-4 ரப்பரின் விலை கிலோ 252 ரூபாயை எட்டியுள்ளது. திறந்த சந்தையில் ஷீட் ரப்பர் 254 ரூபாய்க்கும். லேடெக்ஸ் (ரப்பர் பால்) 231 ரூபாய்க்கும் விற்பனையானது. அதேவேளையில் அகர்தலா போன்ற பிற மாநிலச் சந்தைகளில் விலை இன்னும் 250 ரூபாய்க்குக் கீழேயே உள்ளது. அங்கு ஆர்.எஸ்.எஸ்-4 விலை கிலோவுக்கு 241 ரூபாயாகப் பதிவாகியுள்ளது. ரப்பர் விலை அதிகரிப்பது விவசாயிக ளுக்கு நல்ல செய்தியாக இருந்தா லும், நடைமுறையில் உற்பத்தி மிகக் குறைவாகவே உள்ளது. கடும் கோடை வெயில் காரணமாக ரப்பர் மரங்களில் பால் சுரப்பது குறைந்துள்ளதால் சிறு விவசாயிகள் பால் எடுக்கும் பணியைத் தொடங்கவில்லை. தற்போது பெரிய எஸ்டேட் களில் மட்டுமே பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு நிலவும் கடும் வெப்பம் ரப்பர் உற்பத்தியை மிக மோசமாகப் பாதித்துள்ளது. விளைச்சல் இல்லை என்றே சொல்லலாம் என்று தோட்ட உரிமையாளர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். விலை 300 ரூபாயை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டாலும், போதிய உற்பத்தி இல்லாத தால் அதன் முழுப் பலனையும் விவசாயிகளால் பெற முடியவில்லை. சம்பந்தப்பட்ட அதி காரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரப்பர் தொழிலாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

நாகர்கோவில் விளையாட்டு விடுதியில் மாணவர் சேர்க்கைக்கான தேர்வு

நாகர்கோவில், மே 7- தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணை யத்தின் மூலமாக பள்ளி யில் படிக்கும் மாணவ, மாணவிகள் விளையாட்டுத் துறையில் சாதனைகளை புரிவதற்கேற்ப விளை யாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விடுதிகள் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது. 2026-27 ஆம் ஆண்டிற் கான மாவட்ட அளவிலான விளையாட்டு விடுதி தேர்வு போட்டிகள் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கிரிக்கெட்டை தவிர மற்ற போட்டிகள் அனைத்தும் மாணவ, மாணவிகள் இரு தரப்பிலும் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்டது. இந்ததேர்வு போட்டிகளை மாவட்ட விளையாட்டு அதி காரி வினு தலைமையில் மாவட்ட உடற்கல்வி ஆய்வா ளர் நாராயணன் தொடங்கி வைத்தார். இந்த தேர்வில் அனைத்து பயிற்றுனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இது குறித்து மாவட்ட விளையாட்டு அதிகாரி வினு கூறுகையில், தமிழகம் முழு வதும் உள்ள விளையாட்டு விடுதிகளில் மாணவ, மாண விகள் சேர்க்கைக்கான தேர்வு அண்ணா விளை யாட்டு மைதானத்தில் நடை பெற்றது. இதில் 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவி கள் கலந்து கொண்டனர். இதில் தேர்வு செய் யப்படும் மாணவ, மாண விகள் மாநில அளவில் நடக்கும் தேர்வில் கலந்து கொள்ள அனுப்பி வைக் கப்படுவார்கள். அங்கு தகுதியின் அடிப்ப டையில் விளையாட்டு விடுதிகளில் மாணவ, மாண விகள் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

அதிக வட்டி கேட்டு பெண்ணுக்கு பாலியல் தொல்லை சின்னமனூரில் பாஜக தலைவர் கைது

தேனி, மே 7- சின்னமனூரில் அதிக வட்டி கேட்டு மிரட்டியதோடு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக பாஜக நகர தலைவரை காவல்துறையினர் கைது செய்தனர். சின்னமனூர் நகர் பாஜக தலைவராக பதவி வகிக்கும் சிங்கராஜ் ( 45) பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன் சின்னமனூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், வார வட்டிக்கு ரூ.50 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். வாங்கிய கடனை பெண் திரும்பிச் செலுத்திய நிலை யில், சிங்கராஜ் அதிக வட்டி கேட்டு மிரட்டியதாக கூறப்படு கிறது. அதிக வட்டி பணம் தர மறுத்த பெண்ணை ஆபாச வார்த்தைகளால் பேசியதோடு, அவரிடம் சிங்கராஜ் பாலி யல் ரீதியான தொந்தரவில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் அப்பெண்ணின் மருமகளையும் ஆபாச வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய சின்ன மனூர் காவல்துறையினர், கொலை மிரட்டல், பெண்க ளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, கந்து வட்டி தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து பாஜக நகரத் தலைவர் சிங்கராஜை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

மதுரையில் கனமழை குளம்போல் மாறிய அவனியாபுரம் மாநகராட்சி அலுவலக வளாகம்

மதுரை, மே 7- மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பகலில் வெயில் வாட்டிய நிலையில் இரவு நேரத்தில் மதுரை மாநகர், புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. திருப்பரங்குன்றம், திருநகர், அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் வியாழனன்று நள்ளிரவில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதனால் மழை நீர் சாலைகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில் மதுரை அவனியாபுரம் மாநகராட்சி அலு வலகத்திற்குள் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மாநகராட்சி ஊழியர்கள் பணிக்கு சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரி களுக்கு தகவல் தெரிவித்திருப்பதாகவும் கழிவுநீர் உறிஞ்சும் வாகனம் மூலமாக அகற்றுவதற்கு நட வடிக்கை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ள னர்.

காணாமல் போன மூதாட்டி சடலமாக மீட்பு

நத்தம், மே 7- திண்டுக்கல் மாவட்டம் நத்தம்- செட்டியார்குளத் தெரு வைச் சேர்ந்தவர் மாரிமுத்து மனைவி வெள்ளைத்தாய் (85). இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடி யும் கிடைக்கவில்லை. இந்நிலையில் செட்டியார்குளம் கண்மாய் பகுதியில் மூதாட்டி ஒருவர் பிணமாக கிடப்பதாக நத்தம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நத்தம் போலீ சார் கண்மாய்க்குள் கிடந்த மூதாட்டியின் உடலை தீய ணைப்பு துறையினரின் உதவியுடன் மீட்டு நத்தம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இறந்த வர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காணாமல் போன வெள்ளைத்தாய் என்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து நத்தம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மூதாட்டி இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

நத்தம் அருகே பைக் கவிழ்ந்து விபத்து சிகிச்சையில் இருந்த தந்தை பலி

நத்தம், மே 7- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே புதுப்பட்டி யைச் சேர்ந்தவர் ராஜ்கமல்(39). இவர் கடந்த 3 ஆம் தேதி தனது இரு சக்கர வாகனத்தில் மகன் கிரிபாலனுடன் (12) நத்தத்திற்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். செங்குளம் பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத் துக்குள்ளானது. இதில் கீழே விழுந்ததில் இருவரும் காய மடைந்தனர். ஆபத்தான நிலையில் இருந்த இருவரை யும் அக்கம்பக்கத்தினர் மீட்டு நத்தம் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் பலத்த காயமடைந்த ராஜ்கமல் மேல் சிகிச் சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு சிகிச்சை பலனில்லா மல் ராஜ்கமல் புதனன்று உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நத்தம் போலீசார் வழக்குப் பதிவு செய்து

விசாரணை நடத்தி வருகின்றனர். காட்டெருமை தாக்கி கூலித் தொழிலாளி பலி சின்னாளப்பட்டி,

மே 7- திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே கொங்கப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம் (57) கூலித் தொழிலாளி. அதே பகுதியில் தனியார் காபி தோட்டத்திற்கு வேலைக்கு சென்றார். அப்போது புதருக்குள் இருந்து திடீ ரென வெளியே வந்த காட்டெருமை செல்வத்தை முட்டி யது. இதில் படுகாயமடைந்த செல்வத்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரும்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்த னர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி இறந்தார்.

மதுவிற்றவர் கைது

நத்தம்,மே 8- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் அரசு அனுமதி இன்றி மது விற்பனை நடப்ப தாக நத்தம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல் வம், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் உள்ளிட்ட போலீசார், நத்தம் சுற்று வட்டார கிராமப் பகுதி களில் ரோந்து பணியில் ஈடு பட்டிருந்தனர். அப்போது நத்தம் அருகே பள்ளபட்டி மேம் பால பகுதியில் பரளிபுதூ ரைச் சேர்ந்த கணேசன் (46) என்பவர் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதை யடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 27 மதுபாட்டில்களை பறி முதல் செய்தனர்.

விசிக முன்னாள் நிர்வாகி கொலை கண்டித்து சாலை மறியல்

காரியாபட்டி, மே 7- காரியாபட்டி அருகே உள்ள குரண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுரு(52). விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் முன்னாள் நிர்வாகியாவார். இந்நிலையில், அங்குள்ள கண்மாய் பகுதிக்கு அவர் சென்றபோது, மறைந்திருந்த மர்ம நபர்கள் அவரைக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டனர். இச்சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளை உட னடியாகக் கைது செய்ய வலியுறுத்தியும் விஜயகுருவின் உறவினர்கள் மற்றும் விசிகவினர் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறி யலில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், அவர்களு டன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதிளித்தனர். இதை யடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.

சந்தன மரம் கடத்திய 2 பேர் கைது

விருதுநகர், மே 7- விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே வனப்பகுதியில் சந்தனமரத்தைக் வெட்டிக் கடத்திய இரு வர் கைது செய்யப்பட்டனர். வில்லிபுத்தூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட அழகர் கோவில் பீட்டில் செண்பகத்தோப்பு - வ.புதுப்பட்டி மலை யேற்ற பாதையில் வனத்துறையினர் ரோந்துசென்றனர். அப்போது அவ்வழியே வந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் சந்தனக் கட்டை கள் இருப்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் சந்தன மரங்களை வெட்டி விற்ப னைக்காக கடத்தி சென்றது தெரியவந்தது. சுமார் 8 கிலோ சந்தனக் கட்டைகள், ரம்பம், கோடாரி உள்ளிட்ட பொருட் களை பறிமுதல் செய்தனர். இக்குற்றச் செயலில் ஈடுபட்டது வருசநாடு அருகே வாலிப்பாறை பகுதியை சேர்ந்த குபேந்திரன் (55), காந்தி கிராமம் பகுதியைச் சேர்ந்த சோலைராஜா(51) ஆகியோர் என்பதும் தெரியவந்தது. மேலும் தப்பியோடிய பால் பாண்டியை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.