திருநெல்வேலி விரைவு செய்திகள்
22 Jul 2026, 10:18 pm

நாளை எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

நாகர்கோவில், ஜூலை 22 - கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் ஜூலை 24 அன்று பிற்பகல் 4 மணியளவில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் எண்ணெய் நிறுவனங்களின் மேலாளர்கள், எரிவாயு முகவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட முகவரிப் பட்டியலில் உள்ள தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள், எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொண்டு எரிவாயு விநியோகம் செய்வதில் உள்ள குறை களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

தனியாக வசித்த முதியவர் உயிரிழந்த நிலையில் மீட்பு

நாகர்கோவில், ஜூலை 22 - நாகர்கோவில் டபிள்யுசிசி கல்லூரி அருகே ஞானத் தெருவில் தனியாக வசித்து வந்த 60 வயது முதியவர் செல்லத் துரை வீட்டில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். இரண்டு நாட்களாக வீடு பூட்டியிருந்ததுடன், துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் வடசேரி போலீ சாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் கதவை உடைத்துச் சென்று பார்த்த போது முதியவர் படுக்கை யில் உயிரிழந்து கிடந்தார். பின்னர் திருவிதாங்கோடு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நியாஸ் அகமது தலைமையிலான குழுவினர் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ஆசாரிப் பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வடசேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

லட்சக்கணக்கில் மோசடி: சுசீந்திரம் கோவில் கணக்கர் கைது

நாகர்கோவில், ஜூலை 22 - கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில் களில் ஒன்றான சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைக்காக போலி ரசீது புக் அச்ச டித்து பக்தர்களிடம் வசூலித்த பல லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவத்தில் கோவில் கணக்கர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் குமரி மாவட்ட திருக்கோ வில் நிர்வாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பைக் திருடனுக்கு 3 ஆண்டு சிறை

குழித்துறை, ஜூலை 22 - மார்த்தாண்டத்தில் பைக் திருடியவனுக்கு 3 ஆண்டு கள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து குழித்துறை நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. மார்த்தாண்டம் ஜங்ஷனில் தனியார் மருத்துவமனை முன்பு நிறுத்தியிருந்த வினோத் என்பவரின் பைக் திருட்டு போனது. இது தொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் வழக்குப் பதிந்து உண்ணாமலைக்கடையைச் சேர்ந்த விஷ்ணுவை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை குழித்துறை குற்றவியல் நடுவர் நீதி மன்றம் எண் ஒன்றில் நடந்தது. 7 மாதங்கள் விசாரணைக்குப் பின், விஷ்ணுவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி சசின்குமார் தீர்ப்பு வழங்கினார்.

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல்

நாகர்கோவில், ஜூலை 22 - தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு சீல் வைத்து அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ஜெயராமபாண்டியன் தலைமை யில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கரநாராயணன், க.சக்திமுருகன், ரவி, பிரவீன் ரகு, ஜெஃப்ரி ஆகியோர் இணைந்து கோதநல்லூர், கருங்கல், சடையன்குழி, கண்ணனாகம், கொல்லங்கோடு, வெள்ளையம்பலம், நித்திரவிளை, வில்லுக்குறி, இரணியல்கோணம் ஆகிய பகுதிகளில் 46 கடைகளை ஆய்வு செய்தனர். ஆய்வின்போது 3 கடைகளில் பதுக்கி வைக்கப்பட்டி ருந்த தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட கணேஷ் புகையிலை, கூல் லிப் மற்றும் மெல்லும் புகையிலை பாக் கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இரணியல் கோணம் பகுதியில் மூன்றாவது முறையாக கணேஷ் மற்றும் கூல் லிப் புகையிலைப் பாக்கெட்டுகள் 10 கிலோ பறிமுதல் செய்து, இரணியல் காவல்நிலையத்தில் ஒப்படைத்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டது. மூன்றாவது முறையாக குற்றம் புரிந்த இந்த கடைக்கு ஒரு லட்சம் ரூபாயும், மற்ற இரண்டு கடைகளுக்கு 25000 ரூபாயும் உணவு பாதுகாப்புத் துறை மூலம் அபராதம் விதிக்கப்பட்டது. இது போன்ற தடை செய்யப்பட்ட புகை யிலை விற்பனை குறித்த புகார்களை 9444042322 என்ற வாட்சப் எண்ணில் தெரிவிக்கலாம் என்று கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

சின்னமுட்டத்தில் வடமாநில மீனவர் மாரடைப்பால் மரணம்

நாகர்கோவில், ஜூலை 22 - சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன வர்களுடன் விசைப்படகில் கடலுக்கு செல்ல இருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். கன்னியாகுமரி ஊரைச் சார்ந்த சகாய ஆண்டனி ஜானி என்பவர் தலைமையில் 13 பேர், செவ்வாயன்று நள்ளிரவில் மீன்பிடிக்க செல்ல இருந்த நிலையில், அப்போது தூங்கி கொண்டிருந்த மீன் பிடி தொழிலாளர்களை எழுப்பும் போது ஒடிசா மாநிலம், கஞ்சம், கோலப்பந்தா ஊரைச் சார்ந்த கோந்தி சன்னியாசி (40) என்பவர் அசைவற்ற நிலையில் கிடந்துள்ளார். பின்னர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்த போது மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி கடலோர பாது காப்பு குழும காவல் ஆய்வாளர் சாந்தி தலைமையில் போலீசார் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்த னர்.