நகராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்டப் பணிகள் ஆய்வு
17 Jul 2026, 10:22 pm

நகராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்டப் பணிகள் ஆய்வு

நாகர்கோவில், ஜூலை 17- கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு, குழித்துறை, குளச்சல் ஆகிய நகராட்சிக்குட்பட்ட பகுதி களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குநர் மதுசூத ரெட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், ஆகியோர் ஜூலை 17 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

நகராட்சி நிர்வாகம் சார்பில் மாவட்டத்திற்குட்பட்ட கொல்லங்கோடு, குழித்துறை, குளச்சல், பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளின் தற்போதைய நிலை மற்றும் அவற் றின் நடைமுறைகள் கள ஆய்வு மேற்கொண்டனர். கு

றிப்பாக கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங் கோடு நகராட்சிக்கு சிறப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியும், நகராட்சி பொதுநிதியின் கீழ் ரு.2.90 கோடி என மொத்தம் ரு.4.90 மதிப்பில் கொல்லங்கோடு பகுதியில் புதிய நகராட்சி அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. தற்போது தரைத்தளம் பணிகள் முடிவு பெற்று, முதல் தளத்தில் Roof Slab அமைக்கும் பணிக்கு கம்பிகள் கட்டும் பணி முடிவடைந்துள்ளது. பணியினை தரமானதாகவும் உரிய காலத்திற்குள் விரைந்து முடிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.

ஏ.வி.எம் கால்வாய் கேரள மாநில எல்லை பகுதி வழியாக தமிழ்நாட்டின் எல்லை பகுதியான நீரோடி, வல்லவிளை, புத்தன்துறை, சின்னத்துறை, தூத்தூர், பூத்துறை, இரையுமன்துறை வழியாக தேங்காய்பட்ட ணம், குளச்சல், மண்டைக்காடு உள்ளிட்ட கடற்கரை வழியாக செல்லும். இன்று நீரோடி, சின்னத்துறை பகுதி யில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தற்போது கால்வாயில், செடி, கொடிகள், பாசிகள் படர்ந்து உள்ளது. பாசிகளை அகற்றி நீரோட்டத்திற்கு இருக்கும் தடைகளை நீக்கி குப்பைகளை அகற்றி தூர்வாரி சீர்படுத்த விரைந்து உரிய துறைகளிடம் அனுமதி பெற்று பணி களை தொடங்க துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறி வுறுத்தினார்.

தொடர்ந்து நித்திரவிளை பகுதியில் 6வது மாநில நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.3.50 கோடி மதிப்பில் புதிய தினசரி சந்தை மற்றும் வணிக வளாக கடைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக தரைத்தளத்தில் 43 கடைகள், முதல் தளத்தில் 22 கடைகள் என மொத்தம் 65 கடைகள், அடிப்படை கழிப்பறை, குடிநீர், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதி களுடன் கட்டப்பட்டு வருகிறது. தற்போது பூச்சு பணி கள் முடிக்கப்பட்டு, தரைத்தள பணிகள் நடைபெற்று வரு கிறது.

வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் அனைத்து பணிகளை யும் முழுவதுமாக முடிக்க துறை சார்ந்த அலுவ லர்களுக்கு அறிவுறுத்தினார். கொல்லங்கோடு நகராட்சிக்குட்பட்ட வெங்கஞ்சி கிராந்தூர் பகுதியில் புதிய பேருந்துநிலையம் அமைப்ப தற்கான இடம் நேரில் பார்வையிடப்பட்டது.

விரைந்து நிர்வாக ஒப்புதல் பெற்று, பணிகளை துவக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தபட்டது. அதனைத்தொடர்ந்து குழித்துறை நகராட்சிக்குட்பட்ட புகழ்பெற்ற வாவுபலி பொருட்காட்சி திடல் மண்டபத்தின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. அங்குள்ள பழைய மண்டபத்தை அகற்றிவிட்டு ரூ.6.5 கோடி மதிப்பில் புதிய மண்டபம் கட்டப்பட்டு வரு கிறது. தற்போது சுமார் 70 சதவீதப் பணிகள் நிறைவடைந் துள்ளன.

இன்னும் மேல்கூரை (Roof) மற்றும் சில பணி கள் மட்டுமே மீதமுள்ளன. அடுத்த மூன்று மாத காலத்திற் குள் இப்பணிகளை முழுமையாக முடித்து, மண்டபத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

குளச்சல் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் செயல்பாட் டில் உள்ள நுண்உரம் செயலாக்கம் மற்றும் கழிவுகள் கை யாளும் மையத்தினை ஆய்வு மேற்கொண்டு, குப்பை களை தரம் பிரித்து உரம் தயாரிக்கும் செயல்முறைகள் குறித்து துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்கள். குளச்சல் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.3.5 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கூடுதல் மருத்துவ கட்டிட பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்ட மருந்துக்கோட்டை தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் ரூ.25.5 இலட்சம் மதிப்பில் உரங்கிடங்கு வளாகத்தில் வளம் மீட்பு பூங்கா அமைக்கப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

மேலும் உதயகிரி கோட்டை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கோட்டை யினை நவீனப்படுத்த திட்ட வரைவு தயாரிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் நோக்கில், பல்வேறு அரசுத் திட்டங் களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலு வலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.