உள்ளூர் கைவினைஞர்கள், சமூகத் தயாரிப்புகளுக்கான விற்பனை நிலையம் திறப்பு
25 minutes before
<p><strong>உள்ளூர் கைவினைஞர்கள், சமூகத் தயாரிப்புகளுக்கான விற்பனை நிலையம் திறப்பு</strong></p><p>நாகர்கோவில்,நவ.27-உள்ளூர் கைவினைஞர்கள் மற்றும் சமூகத் தயாரிப்புகளுக்கான விற்பனை நிலையத்தை “ஈவ்னிங்ஸ் பை தி ஓஷன்” (Evenings by the Ocean), கன்னியாகுமரி சூரிய அஸ்தமன முனைக்கு (Sunset Point) அருகிலுள்ள பூம்புகார் பகுதியில் மணிக்கு மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் திறந்து வைத்தார்.</p><p>இந்த விற்பனை நிலையத்தில் சூரிய அஸ்தமன நேரத் தேநீர், மீன் உணவகம் (Fish Café), இயற்கை விவசாயப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் ஆகியவற்றை, இந்தியா முழுவதிலுமிருந்து கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரே இடத்தில் கிடைக்கும்.நபார்டு வாயிலாக பல்வேறு திட்டங்களின் கீழ் பயன்பெற்ற பயனாளிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். தேங்காய் சிரட்டை நகைகள், டெரகோட்டா (சுடுமண்) பொருட்கள், கைத்தறிப் பொருட்கள், தேன், மிளகு, பழங்குடியினர் தயாரிப்புகள், வாழை நார் பொருட்கள், தேங்காய் சிரட்டைக் கலைப்பொருட்கள், மீன் ஊறுகாய், கடல் சிப்பிப் பொருட்கள், டெரகோட்டா அகல் விளக்குகள், எம்பிராய்டரி பொருட்கள், சணல் பொருட்கள், வாழை நார் பொருட்கள்; பொது வசதி மையத்தில் (Common Facility Centre) தயாரிக்கப்படும் ஹெல்த் மிக்ஸ், முருங்கை இட்லிப் பொடி, அப்பளம் போன்ற இயற்கை உணவுப் பொருட்கள், கடல் சிப்பிப் பொருட்கள், முருங்கைப் பொருட்கள், நெல்லிப் பொருட்கள், கருவாடு உள்ளிட்ட பொருட்களை சுற்றுலாப் பயணிகள் ஒரே இடத்தில் உற்பத்தியாளர்களிடமிருந்தே நேரடியாக வாங்கலாம்.இந்நிகழ்ச்சியில் நபார்டு மாவட்ட வளர்ச்சி மேலாளர் ஷரோன் ஹெர்பர்ட், மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ்,கன்னியாகுமரி மாநகராட்சி ஆணையர் பட்டுசாமி, மீன்வளத்துறை அலுவலர்கள், மாவட்டத் தொழில் மையஅலுவலர்கள், பூம்புகார் பிரதிநிதிகள் சுற்றுலா பயணிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
