சுற்றுலாப் பயணிகளுக்காக குமரி திருவிழா
18 Jun 2026, 9:32 pm

சுற்றுலாப் பயணிகளுக்காக குமரி திருவிழா

நாகர்கோவில்,ஜூன் 18- கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத் துறையின் சார்பில் குமரி திருவிழா 5 நாட்கள் நடைபெற வுள்ளது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் தெரி வித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் மாபெ ரும் குமரி திருவிழா நிகழ்ச்சி யானது வருகின்ற 26.06.2026 முதல் 30.06.2026 வரை வெகு விமர்சையாக கொண்டாடப்ப டவுள்ளது.

இவ்விழா குறித்து ஆட்சி யர் மு.பிரதாப் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையிலும், மீண்டும் சுற்றுலா பயணிகள் வந்து சுற்றுலா தலங்களை கண்டுகளிக்கும் வகை யிலும் கன்னியாகுமரி, முட்டம், லெமூர் கடற்கரை, பேச்சிப்பாறை, மாத்தூர் தொட்டிபாலம், திற்பரப்பு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் மற்றும் அடிப்படை வசதிகளை சுற்றுலா துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்ஒருபகுதியாக சுற்று லாப் பயணிகளை ஈர்க்கும் வகை யில் குமரி திருவிழா என்ற மையப்பொருளை கொண்டு, மேற்குறிப்பிட்ட 5 நாட்களும் கன்னியாகுமரி திரிவேணி சங்க மத்தில் பல்வேறு கலை வடி வங்கள், திரைப்பட மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கும் வகயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ் ்விக்கும் வகையில் அயல்மாநில மற்றும் உள்மாநில கலைநிகழ்ச்சி கள் நடத்தப்பட உள்ளது.

ஒவ்வொரு நாளும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை பல்வேறு கலை வடிவங்களில் குமரி திருவிழா நடைபெறவுள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட சுற்றுலா துறை இணை ந்து வெகுவிமர்சையாக “பெரு விழா நம்ம குமரி திருவிழா“ கொண்டாடப்பட உள்ளது.

நடைபெறவுள்ள குமரி திருவிழா வில் அமைச்சர் பெருமக்கள், நாடா ளுமன்ற சட்டமன்ற உறுப்பினர், அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கலை ஞர்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

எனவே கன்னியாகுமரி மாவட்டத் தில் நடைபெறவிருக்கும் குமரி திரு விழாவினை சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.

முன்னதாக குமரி திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து நாகர்கோவில் வருவாய் கோட்டாட் சியர் எஸ்.காளீஸ்வரி அவர்கள் துறை அலுவலர்களுடன் கலந்தா லோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில் மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா. ஜாண் ஜெகத் பிரைட், கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்கு நர் சிவபுகழ், கன்னியாகுமரி நகராட்சி ஆணையர் பட்டுசாமி, துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.