தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நாகர்கோவில், ஜுன் 3- கன்னியாகுமரி நகராட் சிக்குட்பட்ட சுற்றுலா பகுதி களில் மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் ஜுன் 3 புதனன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

3 Jun 2026, 10:21 pm
நாகர்கோவில், ஜுன் 3- கன்னியாகுமரி நகராட் சிக்குட்பட்ட சுற்றுலா பகுதி களில் மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் ஜுன் 3 புதனன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
<p><strong>நாகர்கோவில், ஜுன் 3- கன்னியாகுமரி நகராட் சிக்குட்பட்ட சுற்றுலா பகுதி களில் மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் ஜுன் 3 புதனன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.</strong></p><p>நாகர்கோவில், ஜுன் 3- கன்னியாகுமரி மாவட்டம் குலசேக ரத்தில் கடந்த நில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட சிறு வளையாட்டுத் திடலில் மழைநீர் தேங்குவதால் விளையாட்டு வீரர்கள்-வீராங்கனைகள் அவதியடைந் துள்ளனர். மைதானத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை உடனடியாக மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள் ளது. நகரங்களில்தான் விளையாட்டு உப கரணங்களுடன் நவீன திடல்கள் உள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் அண்ணா விளாயாட்டுத் திடலுக்குப் பிறகு குலசேகரம் அருகி லுள்ள கல்லடிமாமூடு பகுதியில் 4.83 ஏக்கர் பரப்பளவில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சிறு விளையாட்டுத் திடல் அமைக்கப் பட்டுள்ளது. மாவட்டத்தின் மேற்கு பகுதி விளையாட்டு வீரர் வீராங்கனைகளும் பொதுமக்களும் பயனடையும் வகையில் இது விளங்குகிறது. 2023 நவம்பரில் துவக்கப்பட்ட பணிகள் கடந்த ஆண்டு நிறைவடைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மற்ற மைதானங்களைவிட குலசேகரம் மைதானத்தின் சிறப்பு குமரி மாவட்டத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான களரி பயிற்சியாகும். இங்கு ‘தமிழர் பாரம்பரிய தற்காப்பு கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையமும்’ செயல்படுகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இந்த மைதானத்தை முழு மையாக பயன்படுத்தவில்லை. 400 மீட்டர் ஓடுதளம் அமைக்க வேண்டிய நிலையில் தற்போது 200 மீட்டர் மட்டுமே மண் செப்பனிடப்பட்ட நிலையில் உள்ளது. இதிலும்கூட மழைக்காலங்களில் ஓடவோ ,நடைபயிற்சி மேற்கொள்ளவோ முடியாதது விளாயாட்டு வீரர்களுக்கு மட்டுமல்லாமால் முதியோருக்கும் ஏமாற்றமளிப்பதாகும். தற்போது தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து சுமார் 40 மாணவ மாணவிகள் களரி பயிற்சி பெற்று வருகிறார்கள். மழைக் காலங்க ளில் இவர்களும் மைதானத்தை பயன் படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. ஒதுங்கி நிற்கவும் இடம் இல்லாமல் உடற்பயிற்சிக் கூடத்தில் தஞ்சமடைகி றார்கள். மாணவர்களை அதிகாலையில் பயிற்சிக்காக அழைத்து வரும் பெற்றோ ருக்கும் இதே நிலைதான். மைதானத்தை முழுமையாக பயன்படுத்தும் வகையில் கட்டமைப்பு வசதிகளை விரைவாக செய்து நவீனப்படுத்த வேண்டும் என்பது விளையாட்டு ஆர்வலர்களின் கோரிக்கை ஆகும் . ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ ஆய்வு பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஆர்.செல்லசுவாமி கடந்த சில தினங்களுக்கு முன்பு குலசேகரம் சிறு விளையாட்டு மைதானத்தை பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரிடம் மைதானத்தில் தண்ணீர் தேங்காமல் மழைநீர் ஓடை அமைக்கவும் முழுமையாக மைதானத்தை பயன்படுத்தும் வகையில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் மழைக்காலம் என்பதால் கழிப்பறையுடன்கூடிய கூடாரம் அமைக்க உதவுமாறும் விளையாட்டு ஆர்வலர்களும் பொதுமக்களும் கேட்டுக் கொண்டனர். மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவாக இந்த பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.