முந்தய பக்கம்

குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ நெல் சாகுபடி பணி துவக்கம்

7 May 2026, 9:36 pm
குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ நெல் சாகுபடி பணி  துவக்கம்
<p><strong>குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ நெல் சாகுபடி பணி துவக்கம்</strong> </p><p>நாகர்கோவில், மே 7- குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப்பூ என நெல் சாகுபடி பணி நடந்து வருகிறது. கும்பப்பூ அறுவடை பணி கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. தற்போது மழையும் இல்லாமலும், அணையில் போதிய தண்ணீர் இல்லாததா லும், ஆற்றுப்பாசனத்தை பயன்படுத்தி விளைநிலங்களில் சாகுபடி பணியை விவசாயிகள் துவக்கியுள்ளனர். குளத்து பாசன வசதி பெரும் பகுதியில் சாகுபடி பணி நடந்து வருகிறது. பறக்கை, சுசீந்திரம் பகுதியில் உள்ள பெரிய குளங்க ளில் போதிய தண்ணீர் இருப்பதால், ஏப்ரல் 15ம் தேதி நாற்றங்கால் தயாரிக்கும் பணியை விவசாயிகள் மேற்கொண்டனர். தற்போது நாற்றங்கால் தயாரித்து 24 நாட் கள் ஆவதை தொடர்ந்து நாற்றங்காலில் இருந்து நாற்று களை தனியாக எடுத்து நடவு பணியை மேற்கொள்ள விவ சாயிகள் முடிவு செய்துள்ளனர். ஆற்றுப்பாசன வயல்களில் தற்போது நேரடி நெல்வி தைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒருசில விவசாயிகள் வயல்களை உழுது போட்டுள்ளனர். மழையோ அல்லது அணையிலிருந்து நீர் திறக்கும்போது நாற்றங்கால் தயாரிக்க விவசாயிகள் ஆயத்தமாக உள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram