குமரியில் உள்நாட்டு மீன்வளப் பணிகளை செயல்படுத்த தனி உதவி இயக்குநர் அலுவலகம் அமைக்கப்படும்
9 Oct 2026, 11:36 pm

குமரியில் உள்நாட்டு மீன்வளப் பணிகளை செயல்படுத்த தனி உதவி இயக்குநர் அலுவலகம் அமைக்கப்படும்

மீனவர் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் தகவல்நாகர்கோவில், அக்.9-கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் தலைமையில் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அக்டோபர் 9 அன்று நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்நாட்டு மீன்வளப் பணிகளை செயல்படுத்திட தனி உதவி இயக்குநர் அலுவலகம் அமைத்து தருமாறும், புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வரும் மக்களுக்கு மின் இணைப்பு பெற தடையில்லா சான்று கோரியும், கோவளம் ஊராட்சி கழிவுநீர் ஓடையினை சரி செய்து தரக் கோரியும், பூதப்பாண்டி பேரூராட்சியில் மின்விளக்குகள் அமைத்து தரக் கோரியும், இரவு 12.30 மணி முதல் அதிகாலை 3.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் நாகர்கோவிலில் இருந்து மதுரை தடத்தில் பேருந்துகள் இயக்கக் கோரியும், கன்னியாகுமரி மாவட்ட கடலோர கிராமங்களுக்கு காலஅட்டவணையில் குறிப்பிட்டுள்ளவாறு பேருந்துகளை இயக்கிட கோரியும், மீனவர்களின் குடியிருப்புகளுக்கு CRZ விதிமுறைப்படி விதி விலக்கு அளிக்க வேண்டியும், குழித்துறை கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் மீனவ கிராமங்களுக்கு பழைய குடிநீர் குழாயினை மாற்றி புதிய குடிநீர் குழாயினை அமைத்து தரக் கோரியும், கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

இதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர், மீன்வளம் -மீனவர் நலத்துறை துணை இயக்குநர் (மண்டலம்) கன்னியாகுமரி மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களால் பதில் விவரம் தெரிவிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்நாட்டு மீன்வளப் பணிகளை செயல்படுத்திட தனி உதவி இயக்குநர் அலுவலகம் அமைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வரும் மக்களுக்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தடையில்லா சான்று பெறப்பட்ட பின்னர் மின் இணைப்பு வழங்கப்படும் எனவும், கோவளம் ஊராட்சி கழிவுநீர் ஒடையினை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், நீரோடையில் கழிவுகளை கொட்டும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும், மின் விளக்குகள்அமைத்திட அரசாணை பெறப்பட்டவுடன் அமைத்து தரப்படும் எனவும் பதிலளிக்கப்பட்டது.

புற்றுநோய் ஆராய்ச்சி மையம்

மேலும் நாகர்கோவிலிலிருந்து மதுரை தடத்தில் இரவு 12 மணிக்கு மேல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும், பேருந்துகள் இயக்கப்படும் நேரம் கண்காணிக்கப்படும் எனவும், கடலோர கிராமங்களுக்கு பேருந்துகள் முறையாக இயக்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், கன்னியாகுமரி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் புற்று நோய் ஆராய்ச்சி மையம்அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், கோடிமுனை மீன்பிடி இறங்கு தளத்திற்கு சாலைபுனரமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், கடியப்பட்டணம் மீனவ கிராமத்திற்கு குடிநீர் வசதி ஏற்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், கீழக்கடியப்பட்டணம் மற்றும் கடியப்பட்டிணம் மீனவ கிராமங்களில் சாலைகள் சீரமைத்திட விரைவில் கருத்துரு சமர்ப்பிக்கப்படும் எனவும் அதிகாரிகள் பதிலளித்தனர்.

தட்டுமடி தொழிலுக்குத் தடை

மீனவர்களின் குடியிருப்புகளுக்கு CRZ விதிமுறைப்படி விதி விலக்கு அளித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மீன்பிடி தடை காலங்களில் தட்டுமடி தொழிலை தடை செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும்,மேல்மிடாலம் கடற்கரை கிராமத்தில் கடலில் செயற்கை பவள பாறை அமைத்திட விரிவானதிட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுஉள்ளதாகவும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை - பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாகர் மித்ரா பணியாளர்களை பணியமர்த்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், மீனவர்களுக்கு நலவாரிய அட்டைகள் வழங்கிட விண்ணப்பித்திருக்கும் மீனவர்களுக்கு முகாம் நடத்தப்படும்எனவும், மானிய மண்ணெண்ணெய் தகுதியான பயனாளிகளுக்கு வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தனர்.

பிற மாநில விசைப்படகுகள் மீது நடவடிக்கை

அனுமதி பெறாமல் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விற்பனை செய்யும் பிற மாநில விசைப்படகுகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், மீனவர் குழு விபத்து காப்புறுதி நடைமுறையில் இல்லாத இடைப்பட்ட காலத்தில் மரணமடைந்த மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கிட கருத்துரு சமர்ப்பிக்கப்படும் எனவும், மேல்மிடாலம் மீனவ கிராமத்தில் அமைக்கப்பட்ட RO –plant -க்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தடையில்லா சான்று பெறப்பட்ட பின்னர் மின் இணைப்பு வழங்கப்படும் எனவும், தூத்தூரில் திட கழிவு மேலாண்மை திட்டத்தினை செயல்படுத்திட உரிய இடம் தேர்வு செய்யப்பட்டு செயல்படுத்தப்படும் எனவும், மேல குறும்பனை மீன்பிடி இறங்கு தளத்தில் கோபுர விளக்கு அமைத்திட ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், புதிய திட்டத்தின் கீழ் மீனவ கிராமங்களுக்கு பழைய குடிநீர் குழாய்களை மாற்றி புதிய குடிநீர் குழாய்கள் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பதில் விவரம் தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் டி.சாய்சரண்ரெட்டி, நாகர்கோயில் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் வேல்முருகன், மீன்வளத்துறை துணை இயக்குநர், மீன்வளத்துறை கோபிநாத் மற்றும் மீனவ பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.