கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட
12 Aug 2026, 9:51 pm
<p>கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பீச்ரோடு பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி பசுபதி (37) மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரை தேடிய போது போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற பசுபதியை சிறப்பு உதவி ஆய்வாளர் அசோக், தலைமை காவலர் சேக் முகமது ஆகியோர் விரட்டி பிடித்து கைது செய்தனர். இவர்களின் துணிச்சலான செயலுக்காக மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் சான்றிதழ் மற்றும் பண வெகுமதி வழங்கி பாராட்டினார்.</p>
