மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநிலப் பெண்ணுக்கு கும்பல் வல்லுறவு உரிய பிரிவுகளில் வழக்குப் பதியாமல் குற்றவாளிகளுக்கு துணை போகிறதா குமரி காவல் துறை?
yesterday
<p><strong>மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநிலப் பெண்ணுக்கு கும்பல் வல்லுறவு உரிய பிரிவுகளில் வழக்குப் பதியாமல் குற்றவாளிகளுக்கு துணை போகிறதா குமரி காவல் துறை?</strong></p><p>நாகர்கோவில், நவ.14-மனநலம் பாதிக்கப்பட்ட வடநாட்டுப் பெண்ணை கும்பல் பாலியல் வல்லுறவுசெய்த குற்றவாளிகளுக்கு காவல் துறை துணை போகிறதா என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கமும் கேள்வி எழுப்பியுள்ளன.இதுகுறித்து இந்த அமைப்புகளின் மாவட்ட செயலாளர்கள் எம்.ரெகுபதி, ஆர்.வில்சன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே, மனநலம் பாதிக்கப்பட்ட 21 வயது பெண் கடத்திச் செல்லப்பட்டு கும்பல் வல்லுறவு செய்யப்பட்டுள்ளார். 2 வாரங்களுக்கு முன்பு நடந்ததாக கூறப்படும் இந்த பாலியல் வன்கொடுமை நாளிதழ்களில் செய்தியாக நவம்பர் 14 அன்று வெளி உலகுக்கு தெரியவந்துள்ளது. மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில்,குற்றத்தில் நேரடியாக ஈடுபட்ட ஐந்து நபர்கள் ஒரு வாரத்துக்கு பிறகே கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும்தெரியவருகிறது.</p><p>பாதிக்கப்பட்டது வடமாநிலத்தைச் சேர்ந்த பெண். அவர்கள் குடியிருந்த வீடு பூட்டப்பட்டுள்ளது. காவல்துறையினர் நேரடியாக விசாரணை நடத்தியதாகவும் தகவல் இல்லை. கும்பல் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் எந்த மருத்துவமனையில் எத்தனை நாட்கள் சிகிச்சை பெற்றார் என்கிற மருத்துவ பரிசோதனை விவரமும் வெளியாகவில்லை. அவர் அணிந்திருந்த ஆடைகள் போன்றசாட்சியங்களும் தடயங்களும் பாதுகாக்கப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் மீது கடத்தல், கும்பல் பாலியல் வல்லுறவுக்கான பிரிவுகளிலோ, ஊனமுற்றோர் உரிமைச்சட்டம்- 2016 இன் படியோ வழக்கு பதிவு செய்யப்படவில்லை. குற்றவாளிகளை காவல்துறை பாதுகாக்க முயற்சிக்கிறதா என்கிற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.எனவே, வெளிப்படையான நியாயமான விசாரணை நடத்தப்படவும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நீதி கிடைக்கவும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.</p>
